அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

24 July 2011

சிறப்புமிக்க ரமதான் மாதம்...

அல்லாஹ்வின்  நற்பெயரால்..!

சிறப்புமிக்க ரமதான் மாதம்..
இறைமறையை இறைத்தூதருக்கு...
அருளிய மாதம்...

நரகவாசல் - அடைத்து..
நன்மை பெய்க்கும் மாதம்..

நல்வழியாம் நபிவழிபேண..
நல்லதொருமாதம்...

பசிவுணர்ந்து தர்மம்...
அளித்திட வகைசெய்யும் மாதம்...

அல்லாஹ்வின் அறிவிப்பாளர்களான..
வானவர்கள் வருகைதரும் மாதம்...

ஏழைகள்  இல்லாத சமுதாயம்..
ஏக்கங்கள் இல்லாத உள்ளத்தையும்..
உருவாக்கும் மாதம்...

அல்லாஹ்..! விதித்த  கடமையை...
 நிறைக்கும்  மாதம்..

மனிதனில் உயர்ந்தவன் இல்லை..
தாழ்ந்தவன் இல்லை..
சமநிலையை  விரிவாக்கும் மாதம்...

தீமையை தடுத்து..
நன்மையை ஏவும் மாதம்...

இம்மையும் மறுமையும்..
நினைவு கூறும்  மாதம்...

மறுமைவெற்றிக்கு..
பாலமாய் இருக்கும் மாதம்...

படைத்தவனை  -அளந்தவனை..
அறிந்தவனை  ஆள்பவனை..
நிலைத்தவனை  மகிழபோற்றும்...
சிறப்புமிக்க ரமதான்  மாதம்...