அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

29 December 2011

இஸ்லாம் மனிதர்களுக்கான மார்க்கம்...

ஓர் இறை தந்த மார்க்கம்....
ஆறறிவும் ஏற்கும்....

இறைமறை சான்றுகள்..
இறைத்தூதரின்...
பொண்மொழிகள்....

தீண்டாமை தீண்டாத மார்க்கம்...
மனிதர்கள் ஏற்கவேண்டிய  மார்க்கம்...

சகோதரத்துவம் சமத்துவம்..
ஓர் இறைவனை மட்டும்..
வணங்கும் மகத்துவம்...
மலர்ந்த சன்மார்க்கம்....

கடமை சொன்ன இறைத்தூதர்..
கடமையாகவே வாழ்ந்த...
வரலாறு தந்த மார்க்கம்...

சீர்கேட்டின் விளிம்பில் முழ்கும்..
மனிதர்களுக்கு சீர்திருத்தத்தை..
செம்மைபடுத்தும் சிறந்த மார்க்கம்...

அல்லாஹ்வின் ஆட்சியை..
அரசாலும் அதிகாரத்தை...
அற்புதமாய் அறிவிக்கும்..
அழகிய மார்க்கம்...

வணிகம்  செய்யும் முறை...
வணிகத்தில் கிடைக்கும்..
லாபவளர்ச்சியை நேர்மையை..
கொண்டு பெற்றிட சொன்ன..
படைத்தவனின் மார்க்கம்...

இஸ்லாம் ஏற்கவேண்டிய மார்க்கம்..
இஸ்லாம் மனிதர்களுக்கான மார்க்கம்..


19 January 2011

அல்லாஹ்......!!!

கருணை நிறைந்த இறைவன்...
            அல்லாஹ்..!

பொருமை நிறைந்த இறைவன்..
            அல்லாஹ்..!!

பெரும் புகழுக்கு உரிய இறைவன்..
            அல்லாஹ்..!

நாங்கள் உன்னிடமே மீழ்வோம்....
            சுபஹானல்லாஹ்...!

மாநபி வழி தந்த இறைவன்...
           அல்லாஹ்...!

இறைமறையை இறக்கிய இறைவன்..
           அல்லாஹ்...!

உடல் உயிர் கொடுத்த இறைவன்..
           அல்லாஹ்..!

நாங்கள் வணங்கும் இறைவன்..
           அல்லாஹ்..!!

நன்மை தீமை பிரித்த இறைவன்...
           அல்லாஹ்...!

ஐந்து கடமை அளித்த இறைவன்..
           அல்லாஹ்....!

வணங்குதல் ஒன்றே உனக்களிப்பேன்..
நன்றி கொண்டு வாழ நான் மறப்பேனா..

உன் புகழ் உலகம் நிறைக்க..
உன் அடிமை நானாக இருப்பேன்....

03 December 2010

சிறந்தது எது?

அல்லாஹ்வின் நற்பெயரால்...

இறைவணக்கத்தைவிட ..
சிறந்தது எது? !!

ஓர் இறை வழங்கச்சொன்ன..
தர்மத்தைவிட சிறந்தது எது? !!

ஓர் இறை வழங்கிய மறையைவிட..
சிறந்தது எது?!!

ஓர் இறைத்தூதர்களைவிட..
சிறந்தவர்கள் யார் ? !!

தாய்யைவிட சிறந்த உறவு எது ?!!

ஒழுகத்தைவிட சிறந்த...
செல்வம் எது?!!

உழைப்பைவிட உடல் நலத்திற்க்கு..
சிறந்தது எது?!!
  
உதவும் மனம்..
உதவும் கரங்கள்..
உதவும் மனிதனாய்..
உலகில் வாழ்ந்து காட்டுவோம்..? !!

20 November 2010

அல்லாஹ் இருக்கிறான்

அல்லாஹ்    இருக்கிறான்  ! 
ஓர்  இறைவனாக இருக்கிறான் !
இஸ்லாத்தை தோற்றுவித்தவனாக
இருக்கிறான் !
முஹமத் நபியை துதராக
நியமித்தவனாக இருக்கிறான் !
இறைமறையை  அருளியவனாக
இருக்கிறான் !
புகழுக்கு உரியவனாக இருக்கிறான் !
இம்மையிலும்  மறுமையிலும்
ஆட்சியாளனாக இருக்கிறான் !
நன்மையும் தீமையும்
பிரித்தவனாக இருக்கிறான் !
சொர்க்கமும் நரகமும் அமைத்தவனாக
அல்லாஹ் இருக்கிறான் !!!

12 October 2010

யா அல்லாஹ்!

யா அல்லாஹ்!
நீ நிறைந்த
எங்கள் உள்ளத்தில்
நிலையானது எதுவுமில்லை..!!