அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

Showing posts with label அல்லாஹ். Show all posts
Showing posts with label அல்லாஹ். Show all posts

15 April 2012

யா அல்லாஹ்..! எங்கள் இறைவா..!!..2

யா அல்லாஹ்...!

இஸ்லாம்..
ஏற்றோம் நாங்கள்...

இறைமறையை..
படித்தோம் நாங்கள்...
...
முஹம்மத் நபிவழியில்..
 நடக்கவில்லை நாங்கள்..

அலட்சியம் செய்தோம்...
நரகத்தில் இடம் பிடிக்க..

போட்டி போட்டு..
பாவங்கள் குவித்தோம்....

மண்ணறை வாழ்க்கையை...
மறந்தே வாழ்ந்தோம்...

புறம் பேசினோம்..
இட்டு கட்டினோம்...

பொறாமை கொண்டோம்..
கோபம் கொண்டோம்...

பழி தீர்த்தோம்..
கொள்ளையடித்தோம்...

உனக்கு இணையாக..
மனிதர்களை புகழ் பாடினோம்..

வட்டி வாங்கினோம்..
வட்டி கொடுத்தோம்....

வரதட்சணை வாங்கினோம்..
வரதட்சணை கொடுத்தோம்..

இந்த இருவருக்கும்..
சாட்சியாய் இருந்தோம்...

தொழுகாமல் நேரத்தை..
விரைய்யமாக்கினோம்...

வீண்விரைய்யும் செய்தோம் ..
நிலுவை மோசடி செய்தோம்...

ஆடம்பர திருமணம் செய்தோம்..
இசையில் முழ்கினோம்...

ஓர் இறைவா..! தூய இஸ்லாத்தை..
எங்கள் உள்ளத்திலும்....

எங்கள் வாழ்க்கையிலும்..
பூக்கச்செய்வாய்...!!

27 February 2012

யா அல்லாஹ்..! எங்கள் இறைவா..!!

யா அல்லாஹ்..!
ஐந்து கடமை நிறைத்து..
வாழ உன் உதவி...!

எங்களால் பிறர்க்கு..
... பாதிப்பு ஏற்படாமலும்..

பிறரால் எங்களுக்கு..
பாதிப்பு ஏற்படாமலும்..
என்றென்றும் உன் துணை..!

எங்கள் நம்பிக்கைகள்..
தடம்புரழாமல் இருக்க..
உன் கருணை..!

வாழ்வதற்காண வழி...
முஹம்மத் நபி (ஸல்) வழியை..
எங்கள் வாழ்க்கையாக்கு..!

எங்கள் மண்ணறையை..
விசாலமாக்கு...

நரகத்தின் பிடியிலிருந்து..
எங்களை காப்பாற்று..!

மறுமை வாழ்க்கையை..
நீ விரும்பியதை போன்று..
எங்களுக்கு வழங்கு..!

உன் புகழ் ஒன்றே..!
உலகில் போற்றி போற்றி..!!

13 February 2012

யா அல்லாஹ்..!

யா அல்லாஹ்..!
பிறந்துவிட்டவரும்..
மரணித்தவரும்..

பிறக்கபோவோரும்..
... மரணிக்கபோவோரும்..

நீ விதித்தவைகளில்..
உள்ளவர்களே...!

நிலைத்தவனும்..
தீர்ப்பு நாளின்.
அதிபதியும் நீ ஒருவனே..!

மன்னிப்பதற்கும்..
தண்டிப்பதற்கும்...
நீயே உரிமையாளன்...!

முஹம்மத் நபி தந்த மார்க்கத்தை...
நீயே முழுமையாக்கியவன்....

ஓர் இறைவா..!
இணைவைத்து வாழ்பவர்கள்..
உன் கோபத்துக்கு ஆளானவர்களே..

நாங்கள் பாவத்தை தவிர...
வேறெதுவும் செய்யவில்லை...

நல்ல மூமீன்களாய்..
முழுமை பெறச்செய்வாய்..!

உனையின்றி வேறொரு..
பாதுகாவலன் இல்லை...

29 January 2012

அல்லாஹ்வுக்கு நாங்கள் -அடிமை..!

அன்புள்ள அதிகாரமுள்ள அல்லாஹ்வுக்கு...!
உன் அடிமை உள்ளத்தால் எழுதுவது......

அளவற்ற அருளாலன்...
நிகரற்ற அன்புடையோனும் ஆவாய்..!
...
எங்கள் பாவங்கள் மன்னிக்க...
உன்னையே இறைஞ்சுகிறோம்....

சாந்தியும் சமாதானமும் எல்லோர் மீதும்..
நிலவ உன் உதவியை நாடுகிறோம்...

உன் கருணையால் நாங்கள் நலம்..!
உன் அருளினால் வலங்கள் பெற்றோம்..!

உன் ஒருவனுக்கே புகழ் சேர்ப்போம்..!
உன்னிடமே மீளுவோம்..!

கேடுகெட்ட ஷைத்தானிடமிருந்து..
உன்னிடம் பாதுகாவல் தேடுகிறோம்..

இணைவைக்காமல் வாழவும்...
ஓர் கொள்கையை முழுமையாய் பின்பற்றவும்...
எங்களுக்கு உன் துணைவேண்டும்....

மறுமை என்னும் மகத்துவத்தில்..
நாங்கள் உன்னை காண ஆவல்....

இப்படிக்கு என்றென்றும் உன் -அடிமை..
நீடூர் நெய்வாசல் அ பாபு..

26 October 2011

யா அல்லாஹ்..! நீ படைத்து கொடுத்தழகு..!!

நீ..  படைத்த வானழகு..
பொழியும் மழையழகு..

விளையும் பூமியழகு..
வெளிச்சமிடும் நிலவழகு..

பகல் தரும் சூரியனழகு..
நீந்தி திரியும் நட்சத்திரங்களழகு..

உயிர் தரும் காற்றழகு..
ஓர் இறை கொள்கையழகு..

இஸ்லாம் மார்க்கமழகு..
மாமறையழகு..

மாநபி வழியழகு..
ஐந்து கடமையழகு..

ஐய்வேலை தொழுகையழகு...
தர்மம் அளத்தழகு..

நோன்பு நொற்றழகு..
ஹஜ் நிறைத்தழகு..

மஹர் கொடுத்து..
மணமுடிக்கச்சொன்ன பண்பழகு..

சகோதரத்துவத்தை..
சமர்பித்த  சான்றழகு..

விதவை கூடாதென்று..
மறுமணம் வலியுறுத்தியழகு...

14 March 2011

யா-அல்லாஹ்....!


யா-அல்லாஹ்..!
எங்கள் மீது கருணை..
உன் நிழலில் நாங்கள்..

யா-அல்லாஹ்..!
நிரந்திரமானவன் நீ..!
எங்கள் பாவங்கள் மன்னிக்க..
போதுமானவன் நீ..!

யா-அல்லாஹ்..!
மறையருளி மாநபி..
வழி வகுத்தவன் நீ..!
புகழுக்கு உரிமையாளன் நீ..!

யா-அல்லாஹ்..!
ஒளிமையமானவன் நீ..!
இணையற்ற தனித்துவமானவன் நீ..!

யா-அல்லாஹ்..!
படைப்பதும் -அழிப்பதும்..
உயிர் எழுப்புவதும்..
உனக்கு எளிதே..!

யா-அல்லாஹ்..!
உரக்கச்சொல்வோம்..
 நீ-ஒருவனே இறைவன் என்று..

யா-அல்லாஹ்...!
நன்றி மறந்த கூட்டத்தார்களில்
ஒருவராக எங்களை ஆக்கிவிடாதே..
ஏந்தல் நபி போதித்த..
ஏகத்துவ வழியில் தடம்புரழாமல்...
வாழ உன் துணை வேண்டும்..









11 December 2010

யா அல்லாஹ் நீ-அருள்வாய்...!

படைத்த ஓர் இறைவா..!
உடல் உயிர் கொடுத்த இறைவா..!

உன் புகழ் உலகெங்கும்..
உன் பெயர் உலகெங்கும்..
ஒலிக்கிறதே இறைவா..!

பசி கொடுத்து உணவு வழங்கி..
நிறை தந்த இறைவா..!

உன் புகழ் ஒன்றே..
உலகில் போற்றி போற்றி..!

யாவம் தந்த நீயே..
யாவர் நலம் காப்பாய்..!

கொடுத்த உன்னை..
வணங்குவதை விட..
எனக்கென்ன வேலை...!

சொல்லும் செயலும்..
பதிய்ய வைக்கும் நீதீ-மானே..!

நிலம் தந்து வலம் தந்தருள..
நித்தம் நித்தம் உன் புகழ்..
பாடுவேன் உலகினிலே..!

விண்ணையும் மண்ணையும்..
ஆளும் அதிபதி-அல்லாஹ்வே..!

பஞ்சம் பறந்து பசி தீர்ந்து..
போதும் என மனம் வழங்கி..
செல்வம் வழங்குவாய்..!

உளம் நிறைந்த-அல்லாஹ்வே...
உன் புகழ் ஒன்றே...!
உலகில் ஒலிக்க கேட்பேன்....!!!

30 November 2010

ஓர் இறையே ! நம் இறைவன் !...

ஓர் இறையே ! நம் இறைவன் !..
ஒப்பற்றவனே நம் இறைவன் !..
ஓர் இறை கொள்கையே..
நம் மார்க்கம்..
ஓர் இறை தூதர்  முஹம்மத் நபியே..
நம் இறுதி தூதர்..
ஓர் இறை வழங்கிய-அல்குர்ஆன்னே..
நம் வேதம்..
ஓர் இறைவன் விதித்த..
ஐந்து கடமையே!..
நம் வாழ்க்கை பாதை..
ஓர் இறைவனையே..
நாம் வணங்குவோம்..
ஓர் இறைவனையே..
புகழ் உரைப்போம்..
ஓர் இறைவனிடமே..
நாம் பாதுகாவல் தேடுவோம்..
ஓர் இறையே ! நம் இறைவன்..!

20 November 2010

அல்லாஹ் இருக்கிறான்

அல்லாஹ்    இருக்கிறான்  ! 
ஓர்  இறைவனாக இருக்கிறான் !
இஸ்லாத்தை தோற்றுவித்தவனாக
இருக்கிறான் !
முஹமத் நபியை துதராக
நியமித்தவனாக இருக்கிறான் !
இறைமறையை  அருளியவனாக
இருக்கிறான் !
புகழுக்கு உரியவனாக இருக்கிறான் !
இம்மையிலும்  மறுமையிலும்
ஆட்சியாளனாக இருக்கிறான் !
நன்மையும் தீமையும்
பிரித்தவனாக இருக்கிறான் !
சொர்க்கமும் நரகமும் அமைத்தவனாக
அல்லாஹ் இருக்கிறான் !!!