அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

06 January 2011

சிந்திக்க மட்டும்....

எழுதுகிறேன் எழுச்சி பெறாத...
என் சமூகத்தின் வெளிச்சத்தை...

அன்பை எல்லோரும் போதிக்கிறார்கள்..
போர் குணம் படைத்தவர்களாய்....

ஆசைக்கு எல்லாம் தேவை..
முடியாமைக்கு எல்லாம் தேவையில்லை...

குழந்தையின் கதறல்..
மறுக்கப்பட்ட தாய் பால்...

சிலர் எழுதுவதை..
பலர் படிப்பதில்லை....

அறிந்தவர்கள் செயல் படவில்லை..
அறியாதவர்கள் அறிய முற்படவில்லை...

கணத்துப்போன பாவங்கள்..
மறுமை குற்றவாளியாய் மனிதர்கள்...

நேசத்தை சந்தேகிப்பது நல்லது..
போலியை வெளிப்படுத்தும்...

தாய் சுமந்த தனயன்..
தனயன் செலுத்தாத நன்றி கடன்...

கற்காத கற்ப்பிக்கும்..
முயற்சியில் வெற்றி...

மாணவிகள் மாணவர்களை..
குறைவான மதிப்பெண் பெற..
வாய்ப்பளித்தார்கள்...

இளைஞர்களின் இளமை காலத்து கனவு..
கற்பனை இல்லாமல் இருந்தது...

மனிதர்களுக்கு மன்னிக்க தெரியவில்லை..
மன்னிக்க கூடிய ஓர் இறைவனிடம்..
மன்னிக்க கேக்கவும் தெரியவில்லை....

05 January 2011

அறிந்தும் அறியாமலும்....

 நேசிக்க தெரியாதவர்கள்..
 சுவாசிக்க தெரியாதவர்கள்..

உண்மை வெளிச்சம் கொண்டவை..
தாமதமாய் வெளிபடுத்தும்..

பிறப்பில் தொடங்கிய பயணம்..
இறப்பில் நிறைவடைந்தது..
வாழ்க்கை பதிவுகள்...

பொருமையும் சோம்பேறியும்..
பிரித்து பார்க்க முடியாதவை..

உன் நேசத்தில் மகிழ்ந்தேன்..
உன் வெருப்பில் மகிழ்ந்து..
கொண்டியிருகிறேன்.....

தங்கம் பசியை போக்கவில்லை..
அணிந்து மகிழ அள்ளள் படும்..
மனிதர்கள்....

தேடுதல்தான் வெற்றியின்..
இலக்கை அடைய்ய முடியும்..

நம்பிக்கையோடு முயற்சித்தால்..
வெற்றிதான் எல்லை.....

ஒழுக்கத்தை எப்போதும்..
உரசி பார்க்கும் நம் பலவீணம்..

காதலில் ஒரு முறையாவது..
தோற்றுவிடு நெறியான வாழ்க்கைக்கு..
உதவி புரியும்....

அறியாதவன் எழுதியதை..
அறிந்தவர்கள் கருத்துரைக்க..
வாக்களிக்க வாய்ப்பு.....

04 January 2011

இளைஞர்களே..! உங்களுக்காக...

உன் சொல்லும் செயலும்..
வரலாறு வரவேற்க வேண்டும்..

கற்பனையில் கூட உன் மானத்தை..
விற்பனை செய்து விடாதே..

பூக்களுக்கு ஒரு நாள் வாழ்க்கை..
அது கூட புன்னகையோடு..
மரணிக்கிறது...

நன்றி கெட்டவனாய் வாழ்வதை விட..
நல்லவனாய் மரணித்து விடு....

நீ-வாழும் போதே உன் தர்மம்..
ஏழையை வாழவைக்க வேண்டும்..

உனக்கா வாழுகிற வாழ்க்கை..
உறவுக்காக வாழுகிற வாழ்க்கை..

உற்றார்க்காக வாழுகிற வாழ்க்கை..
ஊருக்காக வாழுகிற வாழ்க்கை..

உலகுக்காக வாழுகிற வாழ்க்கை..
எதையும் உதறிவிடாதே...

புத்தக மோகம் எழுத்து தாகம்..
படிக்கும் பாகம் கற்று கற்ப்பிக்கும்..
கல்வி பரிமாணம் உனக்குள்..
இருக்கும் செல்வம்......

03 January 2011

இதப்படிங்க முதல்ல......

விடியல் சொன்னது..
உழைத்து வாழ் என்று....

உண்மை உள்ளத்தில்...
சுமந்தே வாழ்....

விளைவுகள் விளைகிறது...
சந்தர்ப்பவாதிகளாள்...

பதவி என்பது பரிசோதிக்கும்..
இயந்திரம் போன்றது....

பதவி கொடுத்து...
சோதித்த பொதுமக்கள்..
பொதுமக்கள் சுமக்கும்..
சோதனைகள்...

ஆளும் ஆணவம் கர்வம்..
ஊழல்களாக உருவெடுத்தது...

வியாபார விளிம்பில்..
வணிகமானது..
மனித சிந்தனைகள்...

உழைக்க மறக்கவும் மறுக்கவும்..
இலவசம் உதவி புரிகிறது...

லச்சம் கோடி ஊழல்..
நீதி மன்றங்கள் விலை பேசப்படும்..
சட்டம் எங்கே? தண்டனை வழங்குவது...

முப்படை கொண்டும்..
அழிக்க ஒழிக்க முடியாத..
நம் நாட்டின் லஞ்சம்...

வழிபறி கொள்ளையர்களின்..
வலமான வாழ்வு...

நம் நாட்டு கலாச்சாரத்தை..
கட்டிக்காக்கும் நடிகைகள்..

கடந்த காலத்தை படிக்கும்..
இளைஞர்கள் வருங்காலத்தை..
படிக்கவில்லை....

01 January 2011

ஆறாவது -அறிவு....

ஏதோ உனக்கு..
கோளாரு இருக்கிறது..

சிந்திக்காத தடம் புரளும்..
உன்னை என்ன செய்வது..

மறக்க பிறந்த -அறிவாய்..
நீ ஏன்? இன்னும் இருக்கிறாய்..

சொல் காத்து வாழ..
செயல் காத்து வாழ..

உலகில் அமைதி நிலவ..
மனிதனுக்குள் தழைக்காமல்..
விதையாகவே இருக்கிறாய்...

உன் மீது போர் குற்றம்..
சுமத்தினால் என்ன தவறு..

விண்ணுக்கு சென்று வர..
உதவியது நீ...

மண்ணுக்குள் மகிழ்ந்து வாழ..
மனம் வைக்கலாகதா..?

நாகரீக கலாச்சார நச்சை..
அரை நிர்வாண இழுக்கை..
மதம்- நிறம்-மொழி-வெறி-கொச்சை..
வளர்ச்சி என்று வர்ணிக்கிற..
உன்னை தேவை என்பதா ..?

நீ-எனக்குள் இல்லை என்றால்..
முழு மனிதனாக இருக்க..
வாய்ப்பு இல்லை...

நீ நானாக மட்டும் இல்லாமல்..
நாங்களாக நன்மையாக..
நட்பாக நலமாக வலமாக..
எல்லோருக்குள்ளும்..
குடியேறி விருட்சமாய்..
விழித்தெழு உலகில்..
அமைதி அறவ உன் சேவை..
தேவையாக இருக்கிறது....