அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

14 January 2011

ஓர் இறை நம்பிக்கையாளர்களே....!

இஸ்லாம் கேட்கிறது..
நீங்கள் எந்த மார்க்கத்தை..
பின்பற்றுகிறீர்கள்..

உண்மையை உங்கள்..
உள்ளத்தோடு உரசி பாருங்கள்..
தெரிந்து தெளிந்து மாநபிவழி நடந்தால்..
மறுமை வெற்றி நமக்குத்தான்..

பெண்வீட்டார் வீடு கொடுக்கும் முறை..
மாப்பிள்ளை வீட்டார் வீடு வாங்கும் முறை..
ஒரு சில ஊர்களிள் இருக்கத்தான்..
செய்கிறது....

நம் சமுதாய பெரியார்களே...
நீங்கள் இன்னும் எத்தனை ஆண்டு காலம்தான்..
அறியாமையில் வாழ்வீர்கள்..
வாழச்சொல்வீர்கள்..

அல்லாஹ்வின் வேதத்தை..
கற்க நேரம் ஒதுக்குவோம்..
அறிந்து வாழ்வதற்கு ஆய்வு செய்வோம்..
நபிவழி நடக்கும் சமூகமாக..
மாற்றி காட்டுவோம்....

இணைவைப்பதிலிருந்து விடுபட..
வட்டி வாங்குவதிலிருந்து விடுபட..
வரதட்சனைவாங்குவதிலிருந்து விடுபட..
தர்கா வழிபாட்டில் இருந்து விடுபட..
இந்த சீர்கெடுக்கும் கலாச்சாரத்தில் இருந்து..
ஏன்?   இன்னும்  விடுபடமுடியவில்லை........

12 January 2011

ஹைக்கூவில் ஒரு குரல்...

ஹைக்கூவில் ஒரு குரல்.....

அதிகாலை சோம்பேறி நான்..
ஒய்வு எடுக்க ஒய்யாமல்..
உழைக்கிறேன்....

நேற்றைய்ய சம்பவம்..
இன்றைய்ய நிலை..
நாளைய்ய மாற்றம்...

கண்ணாடியில் முகம் பார்த்தேன்..
இதயத்தில் உன் உருவம்..

பால் பவுடர் குடித்து வளர்ந்த...
குழந்தையின் தாய் பாசம்...

அன்பும் அரவனைப்பும்..
ஆற்ற வேண்டிய தாய்..
விலை பேசி விற்றால்..

முதியோர் இல்லம்..
அதிகம் திறந்த பட்டியலில்..
இந்தியாவுக்கு முதலிடம்....

லஞ்சம் வாங்கிய போது பிடிப்பட்ட..
லஞ்ச ஒழிப்பு அதிகாரி....

எடை குறைப்பு செய்யாத..
கூட்டுறவு அங்காடி ஊழியர்...

லஞ்சம் கொடுக்காத வாங்காத..
நிலம் பத்திர அலுவலகத்தில்..
பத்திரம் பதிவு செய்து வாங்கப்பட்டது...

நெஞ்சம் பொருக்குதில்லை..
அறியாமை சமூகத்தின்..
அவலங்ளை..............

10 January 2011

நிகழ் காலத்தின் வெளிச்சம்....

இதுவும் ஒரு உண்மை..
மார்க்கத்தை புறந்தள்ளி விட்டு..
சமுதாய சீர்கேட்டை.....
காலகாலமாய் நடைமுறை படுத்தும்..
நம் பெருமக்கள்...
இதுவும் ஒரு உண்மை..

சமாதிகளிள் கையேந்தி..
படைத்தவனிடம் சிபாரிசு..
செய்ய சொல்லும் அறியாமையிலும்..
நம் பெருமக்கள்...
இதுவும் ஒரு உண்மை..

கட்சிகளாய் காட்சிகளாய்..
இயக்கங்களாய் பிரிவுகளாய்..
கோஷ்டிகளாய் துண்டு துண்டாய்..
சிதறி கிடக்கும் நம் பெருமக்கள்..
இதுவும் ஒரு உண்மை....

வரதட்சனை மனிதாபிமானம்..
தொலைத்த மனிதர்களின்..
மார்க்கம் அறியாத அல்லது..
அறிந்தும் அறியாத..
குருடர்களாய் செவிடர்களாய் பேரம்..
 பேசும் நம் பெருமக்கள்...
இதுவும் ஒரு உண்மை....

08 January 2011

படிக்க பயன்பெற....

ஆதம் ஹவ்வா வாரிசுகள்...
சீர்கேட்டின் சீற்றத்தால்....
அடித்து செல்லப்பட்டார்கள்...

உலகபிரமாண்டத்தை சிந்திப்போர்..
சிறந்த மார்க்கத்தை தேர்ந்தெடுப்பர்..

பிறப்பிடமும் இறப்பிடமும்..
அறியாத அறியமுடியாத..
பகுத்தறிவாளர்கள்...

நிலைகள் மட்டும் நிலைத்தே இருக்கிறது..
அன்பு அறிதாய் இருக்கிறது..
ஆவல்கள் அதிகமாக இருக்கிறது...

ஆடுவோரும் பாடுவோரும்..
அறிவதில்லை ஏழையின் பசியை...

பூக்கள்தான் புன்னகைகிறது..
மனிதர்கள் பறிப்பதற்காக...

காகித பட்டறையில்..
கல்வி விதை....

உண்மை பேசுமா?
நீதி வெல்லுமா?
நம் நாட்டில்...??

பல தோல்வியில்தான்..
வெற்றி இருக்கிறது...

நம்பிக்கையில் இருந்து..
முயற்சியில் தொடங்கு..
உழைப்பில் தொடரு..
வெற்றியில் முடியும்....

07 January 2011

ஏகத்துவம் ஒரு விளக்கம்....!

ஓர் இறைவன்...

அல்லாஹ் படைத்தவன்..
பராமரிப்பவன்..

அளந்தவன் அளப்பவன்..
அறிந்தவன் ஆழ்பவன்..

அழிப்பவன் உயிர் எழுப்புபவன்..
புகழுக்கு உரியவன்..

புகழ் அல்லாஹ்வுக்கு உரித்தானது..
புகழ் எவருக்கும் செலுத்த இயலாது..
முடியாது கூடாது...

நம் தூதருக்கு வஹி மூலம்..
வழங்கிய அழகிய அல்குர்ஆனில்..
அடுக்கடுக்கான ஏராளமான..
வசனங்கள்  சிறந்த  ஆதாரங்கள்..

இதுதான் ஏகத்துக்கும் தத்துவம்..
ஏகத்துவம் ஒரு விளக்கம்..

எது? இணை வைத்தல்..
எது? இணை வைத்தல்லாகது..

ஓர் இறை நம்பிக்கையாளன்..
ஏன்? மனித புகழ் புகட்ட வேண்டும்..

ஏன்? சமாதான சாதூர்யத்தை கொண்டு..
புகழை பிரித்து விளக்கத்தை..
விரிவாக்க வேண்டும்..

சிந்திக்க சிதைக்காமல் இருக்க..
ஓர் இறை போற்ற..

ஓரணியில் திரள..
ஓர் ஆய்வுக்குள் ஒன்று பட்டு வாழ..
ஓர் இறை துணை வேண்டும்....