அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

30 November 2010

ஓர் இறையே ! நம் இறைவன் !...

ஓர் இறையே ! நம் இறைவன் !..
ஒப்பற்றவனே நம் இறைவன் !..
ஓர் இறை கொள்கையே..
நம் மார்க்கம்..
ஓர் இறை தூதர்  முஹம்மத் நபியே..
நம் இறுதி தூதர்..
ஓர் இறை வழங்கிய-அல்குர்ஆன்னே..
நம் வேதம்..
ஓர் இறைவன் விதித்த..
ஐந்து கடமையே!..
நம் வாழ்க்கை பாதை..
ஓர் இறைவனையே..
நாம் வணங்குவோம்..
ஓர் இறைவனையே..
புகழ் உரைப்போம்..
ஓர் இறைவனிடமே..
நாம் பாதுகாவல் தேடுவோம்..
ஓர் இறையே ! நம் இறைவன்..!

28 November 2010

வாழ்க்கை எப்போது ?- அழகு ?

மறையறிந்தால் -அழகு..
நபி வழி நடந்தால் -அழகு..
தொழுதால் -அழகு..
பொறுமை சுமந்தால்-அழகு..
அடக்கம் ஒழுக்கம் -அணிந்தால்-அழகு..
அன்பை பெற்றால்-அழகு..
அறிவை வளர்த்தால்-அழகு..
தர்மம் கொடுத்தால்-அழகு..
கடமை நிறைத்தால்-அழகு..
இஸ்லாம் கற்றால்-அழகு..
இஸ்லாத்தை கற்பித்தால்-அழகு..
ஓர் இறை நம்பிக்கையோடு வாழ்ந்தால்..
வாழ்க்கை எப்போதும்-அழகு...



              

27 November 2010

நீதியை பற்றி...

நீதியை செலுத்து..
நீதியை காத்து கொள்..
நீதியை நிலைநாட்டு..
நீதி கிடைத்திட போராடு..
நீதிக்கு கூட சாட்சி தேவை..
நீதி வெல்ல துணை இரு..
நீதியின் பக்கம் வெற்றி நிச்சயம்..
நீதியின் குரலாய் ஒலித்திடு..
நீதியை தேடிச்செல்..
நீதிக்காக பொறுமை காத்திடு..
நீதியை நாடு..
நீதி உனக்கு உரியது..
நீதிதான்   உனது  கவசம்..
நீதியை தொலைத்தவன்..
நிம்மதியை இழந்தவன்..
நீதி மனிதன் ஏற்க வேண்டிய..
மதிக்க வேண்டிய..
சுமக்க வேண்டிய ஒன்று....

26 November 2010

அன்புள்ள சகோதரர்களுக்கு....

அன்புள்ள சகோதரர்களுக்கு....
சாந்தியும் சமாதானமும்..
நிலைத்து நிலவட்டுமாக...

உங்கள் நம்பிக்கையை..
புதுப்பித்துகொண்டே இருங்கள்...

உங்கள் முயற்ச்சியை விரிவாக்குங்கள்..
உங்கள் சிந்தனையை செதுக்கி..
கொண்டே இருங்கள்...

உங்கள் போராட்டம் வெற்றியை..
அடைந்த பின்னும்..
உங்கள் போராட்டம் தொடரட்டும்..

25 November 2010

இளைஞர்களே!

இளைஞர்களே!
உங்கள் குடும்பமும் ....
உங்கள் தேசமும் ...
உங்கள் இரு கண்கள் ..
நீங்கள்  விடியும் முன்னே ..
விழித்திடுங்கள் ...

நேரம் விரைய்யமாக்காமல் ....
உழைத்திடுங்கள் ...
கர்வம் கொள்ளாமல் .
வாழ்ந்திடுங்கள்..

கடமையை ஏற்று...
கண்ணியம் காத்திடுங்கள்...
 
உங்கள் ஒவ்வொரு வெற்றியும்..
போராட்டத்தில் தொடங்குகிறது..

நிலவின் வெளிச்சம் உலகுக்கு..
ஒரு தந்தையின் உழைப்பு..
தன் குடும்பத்துக்கு..

ஓர் இறைவனின் படைப்பு..
மனிதனுக்கு...
ஒரு வீரனின் வெற்றி தன் நாட்டுக்கு ..

ஒரு தேடலில் கிடைத்த வெற்றி ...
தேடலில் தொடரட்டும் ...
உங்கள் வாழ்க்கை பயணம் ....