ஹைக்கூ வில் ஓர்-அறைக்கூவல்...
எதைச்சொல்லியும் பயன்இல்லை..
ஓர் இறை ஏற்காதவரை..
எல்லா ஆதாரமும் -அல் குரானிலும்..
ஹதிஸ்களிலும் இருந்தும்..
இல்லாத ஒன்றை நம்புகிறவர்கள் ..
இருக்கத்தான் செய்கிறார்கள்...
விவாதிக்கத்தான் தொடங்குகிறார்கள்..
தர்க்கத்தில் முடிக்கிறார்கள்..
பாலைவன ஆயுள் கைதி..
தொலைபேசி வாழ்க்கை..
பிரிந்து தொலைக்கப்பட்ட இளைமை..
ஒரு வகையான துறவி வாழ்க்கை..
அன்னியசெலவாணி பெற்று தரும் சேவை..
படிக்காத படிக்க முடியாத சமுதாயம்..
அன்பு ஒன்றே விளங்குகிறது..
அமைதிக்கான வழி என்று..
போராடி தோற்றவன் குற்றவாளி..
சமுதாய பார்வையில்..
விலைபோன பெயர்தாங்கிகள்..
பறக்கும் பட்டத்திற்கு மறுபெயர்..
கொள்கை...
பேரங்கள் தொடர்கின்றன..
ஆட்டு மந்தைகளாய்..
மனித கூட்டங்கள்..
ஆட்சி அதிகார அடக்குமுறை..
பொதுமக்களை நசுக்கும்..
முதலைகள்...
ஏற்றும் பயனில்லை..
கற்றும் பயனில்லை..
கற்ப்பித்தும் பயனில்லை..
அறிவுடையோர் சிந்திப்பர்..
அறிவிழந்தோர் ஆர்வம்..
காட்டாமலே இளமை தொலைப்பர்..
மரணத்தை மறந்த மனிதன்..
பகிர்ந்து வாழ மறந்தான்..
பிறந்த மண்ணில் வாழ முடியாத..
பரதேசி வாழ்க்கை நாடோடி வாழ்க்கை..
நாடவேண்டிய நிலை....
உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஉங்களின் கவிதை வரிகள் நீதி போதனை செய்யக்சகூடியதாக இருக்கிறது இன்னும் எதார்த்தமாக எழுதினால் சிறப்பாகவும் சொல்லக்கூடியக் கருத்து பலருக்கும் சென்றடையவும் ஏதுவாக இருக்கும்.