அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

19 January 2013

எங்கள் முஹம்மத்-அழகிய முன் மாதிரி..!





வான் மறையை தாங்கி..
...
வாழ்வதற்கு வழிகாட்டிய..

வல்லோனின் தூதர்..

மனித சமூகத்தை..

சிந்திக்கச்சொல்லி..

சீரான மார்க்கத்தை..

சிறப்பாய் போதித்த..

சிறந்த நெறியாளர்..!

வானகமும் வையகமும்..

இடையில் உள்ளவைகளும்..

ஓர் இறைவனின்....

கட்டுப்பாட்டில் உள்ளவை..

என்று வியக்க வைத்த..

உம்மி நபி..

படைத்தவனின் பெருமையை..

பொருமையை கொண்டு..

போதித்த பெருமானார்(ஸல்)

மனிதர்களில் தனித்து விளங்கினார்..

ஏக இறைவனுக்கு அஞ்சுவோராய்..

முப்படை வந்த போதிலும்..

முன்னின்று போர் தொடுக்க துணிந்த..

வீரத்தின் விளை நிலம்..

ஒரே இறை ஒரே மறை..

ஒரே முறை என்று..

எளிமையில் ஆட்சி..

வலிமையான சட்டம்..

வலைந்து கொடுக்காத....

வாய்மையை வென்றெடுத்த..

வரலாறு எங்கள் முஹம்மத்..!

அழகிய முன் மாதிரி..!!

No comments:

Post a Comment