அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

26 July 2012

யா அல்லாஹ்..!தொழுது வந்தோம்..

எங்கள் பிழைகளை மன்னிப்பாய்..!

...நோன்பிருந்தோம்..

எங்கள் பாவங்களை மன்னிப்பாய்..!

தர்மம் அளந்தோம்....

நிறைவாக்கி கொள்வாய்..!

இணைவைக்காமல் வாழ்ந்தோம்..

மகிழ்வோடு ஏற்றுகொள்வாய்..!

முஹம்மத் நபி வழி நடப்போம்..

உன் அருளை தருவாய்..!

உன்னை ஏற்ற அடியார்களுக்கு..

பாதுகாப்பை வழங்குவாய்..!

உடல் நலன் கொடுத்து..

நிறைவான செல்வம் கொடுத்து..

பகிர்ந்து கொள்ளும் உள்ளம் கொடுத்து...

இம்மையிலும் மறுமையிலும்...

உன்னை போற்றி வாழ..!.

உன் அடியார்களாகவே வாழச்செய்வாய்..!!

11 July 2012

யா அல்லாஹ்..!உன் அருள் கொண்டு..

பொருள் தேடும்..

உன் அடிமைதான் நாங்கள்...!

நிகரில்லாத உனக்கு..!

புகழ் போற்றும்..!

உன் அடிமைதான் நாங்கள்..!

எல்லாம் படைத்து...!

எல்லாம் கொடுத்த உனக்கு..!

உன் பண்பை உயர்த்தும்..!

உன் அடிமைதான் நாங்கள்..!

எதுவாகவும் இல்லாத எங்களை..

நுட்பமாய் படைத்து..!

சிந்தித்து வாழச்சொன்ன..

நீ ஒருவனே எங்கள் இறைவன்..!!

உன் அடிமையாய் இருந்து..

இணைவைக்காமல் வாழ்வோம்...!