அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

31 December 2010

ஏகனவன்........

            ஏகனவன்..
என்னற்ற படைப்புகளை படைத்து..!
அதிபதியாய் ஆளுகிறவன்...!

அறிவுடையோர் ஏற்று வாழ..
அற்புதமாய் இஸ்லாம் தந்தவன்...

பொருமையில் மேன்மையானவன்..
உறுதியில் உண்மையானவன்...

புகழுக்கு உரியவன்..
முஹம்மத் நபியை தூதராக்கி..
இறைமறை வழங்கி ஐந்து கடமை..
நிறைத்து வாழ பூர்த்தி செய்தவன்...

நன்மைக்கும் தர்மத்துக்கும்..
பகரமாய் சொர்க்கம் தருபவன்..

செய்தபாவங்களை மன்னிக்க வேண்டினால்..
மன்னிக்க மனமுடைய்யவன்..

நெறியான வாழ்க்கை..
நேர்மையான செயல்..
பேனி வாழ மகத்துவமிக்க..
ஓர் இறைவன் போதுமான..
     ஏகனவன்.....!!!

28 December 2010

சிந்திக்க மட்டும்....

ஏழையின் கண்ணீரில்..
எத்தனை -அர்த்தங்கள்..

குடிசைக்குள் நிலவொளி..
தென்றலின் உளவல்..
பூனையின் தேடல்..

நாளைய்ய பசிக்கு..
உணவில்லாத உறக்கம்..

செல்வந்தர்களின்..
வீண்விரையும்...

பகிர்ந்து கொள்ளாத..
மனித உலகம்...

இயற்க்கை கூட பாரபட்சம்..
இன்னமும் நீதிக்கு நிதி ஒதுக்கிடு..

லட்சியத்தில் பதவி ஏற்பு..
லஞ்சத்தில் பணி தொடர்ந்து..

ஊழல் பெருச்சாளிகளின்..
நீதிமன்ற பேரம்...

மனசாட்சியை தொலைத்த..
இயந்திர மனிதர்கள்...

மதம் உடுத்தி..
ஜாதி உடுத்தி..
மொழி உடுத்தி..

மனித வாழ்க்கையின்..
மரண பயணம்.......

27 December 2010

தீர்க்க முடியாத தீர்வுகள்....

 நம் நாட்டுச்சட்டம் படித்த நீதிபதிகள்..
நம்பிக்கையின்-அடிப்படையில்..
தீர்ப்பு வழங்கினார்கள்...

வேலை கிடைத்த மகிழ்ச்சி..
கடமை செய்யும் நேரம்..
லஞ்சம் பணியாற்ற வைத்தது...

நிலங்கள் வலமான செல்வம்..
கொழிக்கின்றன கட்டிடங்களாய்...

சுதேசி கொள்கை குரல் வாக்கெடுப்பில்..
தோல்வியுற்றது...

தேர்தல்  களம் தோற்று போன...
பொதுமக்கள்.......

திரைப்படங்கள் சீர்குலைக்க முடியாத...
சமூகம்..? 

கட்டிய தாலி சாட்சியாம்..
கடவுள் மறுப்பாளர்களுக்கு....

14 December 2010

ஆசைகள்...!

உயர பறந்து கொண்டியிருக்கிற..
என் ஆசை எதையும்-அடைய்யவில்லை...

ஆசை கொண்ட--அனைத்தும்..
அனுபவிக்க முடியாதவை..

ஆசை என்பது ஒரு விபத்து..
அந்த விபத்தில் சிக்காதவர்களே இல்லை..

ஆசை கனவு--அலங்கரித்தது..
விடியலில் கலந்தது..

ஆசையில் தொடங்கு..
நிறைவில் முடி..

ஆசை நம்பிக்கையின்..
முதல் படி..

உழைப்பும் உறுதியும்..
இரண்டாவது படி..

இதைப்படி படி படி..
இப்படி வாழ்க்கை படி....

11 December 2010

யா அல்லாஹ் நீ-அருள்வாய்...!

படைத்த ஓர் இறைவா..!
உடல் உயிர் கொடுத்த இறைவா..!

உன் புகழ் உலகெங்கும்..
உன் பெயர் உலகெங்கும்..
ஒலிக்கிறதே இறைவா..!

பசி கொடுத்து உணவு வழங்கி..
நிறை தந்த இறைவா..!

உன் புகழ் ஒன்றே..
உலகில் போற்றி போற்றி..!

யாவம் தந்த நீயே..
யாவர் நலம் காப்பாய்..!

கொடுத்த உன்னை..
வணங்குவதை விட..
எனக்கென்ன வேலை...!

சொல்லும் செயலும்..
பதிய்ய வைக்கும் நீதீ-மானே..!

நிலம் தந்து வலம் தந்தருள..
நித்தம் நித்தம் உன் புகழ்..
பாடுவேன் உலகினிலே..!

விண்ணையும் மண்ணையும்..
ஆளும் அதிபதி-அல்லாஹ்வே..!

பஞ்சம் பறந்து பசி தீர்ந்து..
போதும் என மனம் வழங்கி..
செல்வம் வழங்குவாய்..!

உளம் நிறைந்த-அல்லாஹ்வே...
உன் புகழ் ஒன்றே...!
உலகில் ஒலிக்க கேட்பேன்....!!!

10 December 2010

முதிர் கன்னிகளின் குமுறல்கள்...

நம் நாட்டில் புன்னகைக்காத..
பூக்கள் அதிகம் அத்தனையும்..
முதிர் கன்னிப்பூக்கள்..

பூக்களில் தேன் எடுக்க..
வண்டுக்களின் வரதட்சனை பேரம்..

பெரியார்களால் நிச்சயத்தார்த்தம்..
சீர்வரிசையில் பிடிவாதம்..
கொள்ளையடிக்கும் கூட்டமாக..
மாப்பிள்ளை வீட்டர்கள்...

கேட்பதும் கொடுப்பதும் தவறுதான்..
கால காலமாய் நம் சமுகத்தின்..
அறியாமை முடியாமை இயலாமை..
ஊனமாக முடங்கி கிடக்கிறது..

ஏழை கன்னிகளின்..
வரதட்சனை வளையம்..

மாலை அணிந்த திருமண விழா
மகிழ்விழா மனம் வரதட்சனையில்..
அரங்கேறியது...

09 December 2010

ஹைக்கூ வில் ஓர்-அறைக்கூவல்...

ஹைக்கூ வில் ஓர்-அறைக்கூவல்...

எதைச்சொல்லியும் பயன்இல்லை..
ஓர் இறை ஏற்காதவரை..

எல்லா ஆதாரமும் -அல் குரானிலும்..
ஹதிஸ்களிலும் இருந்தும்..
இல்லாத ஒன்றை நம்புகிறவர்கள் ..
இருக்கத்தான் செய்கிறார்கள்...

விவாதிக்கத்தான் தொடங்குகிறார்கள்..
தர்க்கத்தில் முடிக்கிறார்கள்..

பாலைவன ஆயுள் கைதி..
தொலைபேசி வாழ்க்கை..
பிரிந்து தொலைக்கப்பட்ட இளைமை..
ஒரு வகையான துறவி வாழ்க்கை..
அன்னியசெலவாணி பெற்று தரும் சேவை..
படிக்காத  படிக்க முடியாத    சமுதாயம்..

அன்பு ஒன்றே விளங்குகிறது..
அமைதிக்கான வழி என்று..

போராடி தோற்றவன் குற்றவாளி..
சமுதாய பார்வையில்..

விலைபோன பெயர்தாங்கிகள்..
பறக்கும் பட்டத்திற்கு மறுபெயர்..
கொள்கை...

பேரங்கள் தொடர்கின்றன..
ஆட்டு மந்தைகளாய்..
மனித கூட்டங்கள்..

ஆட்சி அதிகார அடக்குமுறை..
பொதுமக்களை நசுக்கும்..
முதலைகள்...

ஏற்றும் பயனில்லை..
கற்றும் பயனில்லை..
கற்ப்பித்தும் பயனில்லை..
அறிவுடையோர் சிந்திப்பர்..
அறிவிழந்தோர் ஆர்வம்..
காட்டாமலே இளமை தொலைப்பர்..

மரணத்தை மறந்த மனிதன்..
பகிர்ந்து வாழ மறந்தான்..

பிறந்த மண்ணில் வாழ முடியாத..
பரதேசி வாழ்க்கை நாடோடி வாழ்க்கை..
நாடவேண்டிய நிலை....

08 December 2010

ஒரு இறைவன்..

ஒரு இறைவன்..
எல்லாம் படைத்தான்..

ஒரு இறைவன்..
எல்லாம் கொடுத்தான்..

உலகினிலே வாழ..
வைத்தான்..

ஆறறிவை நமக்கு..
தந்தான்..

மாநபியின் வழியை..
தந்தான்..

மாமறையில் வாழும்..
நெறியய் தந்தான்..

ஐந்து கடமை விதியாக்கி..
வாழ்க்கையில்  விதைத்து..
விளையும் நன்மை என்றான்..

ஒரு நாள் ஆயுள் கொண்ட..
பூக்களுக்கு புன்னகை தந்தான்..

பொறுமையுடன் கேளுங்கள்..
தருகிறேன் என்று சொன்னான்..

ஒரு இறைவன்..
எல்லாம் படைத்தான்...       

சதாம் ஹுசேன் சரித்திரம்...

சதாம் ஹுசேன் சரித்திரம்...

வாழ்ந்தவனின் வரலாறு தூக்கில் நிறைவுற்றது..
போராடியவன்-நீ போர்தொடுத்தவன்-நீ..
ஆட்சி அதிகாரத்தில் ஆட்டி வைத்தவன்-நீ..
உன் இளமை காலத்தில் இஸ்லாத்தை சற்று மறந்தவன்-நீ..
உருவம் கூடாது கொலை கூடாது கர்வம் கூடாது..
அழித்தல் கூடாது அகபாவம் கூடாது..
அனைத்தையும் அரங்கேற்றியவன்-நீ
உலகத்து நாயகனாய் உலாவந்தவன்-நீ..
உன் வீரவுரையில் வெற்றி கண்டவன்-நீ..
ஆட்சியாளனாய் ராணுவ தளபதியாய்..
உலக மக்கள் மனதில் பாவித்தவன்-நீ..
உன் மரணம் எல்லா ஆட்சியாளர்களுக்கும் எச்சரிக்கை..
குரல் கொடுக்க முடியாத ஆட்சியாளர்கள்..
நீதி நிலைநாட்ட முடியாத ஆட்சியாளர்கள்..
முடங்கித்தான் போனார்கள்....
ஆங்கிலேயரின் இனவெறி..
உன் தூக்கின்  மூலம் நிருபணமாகிவிட்டது..
நிறவெறியும் இனவெறியும் மொழிவெறியும்..
உலகில் தழைகச்செய்தது வெள்ளையர்களாள்தான்...

06 December 2010

நிகழ்காலத்தின் வெளிச்சம்...

நம் நாட்டு மக்களுகோர் ஓர் நல்லுரை..
லஞ்சம் கொடுக்காத மக்களாய் வாழுங்கள்..
ஊழல் புரிய துணை நிற்காமல் வாழுங்கள்..
கொள்ளையடிக்க வழிவகுக்காமல் வாழுங்கள்..
நாடு உயர நல்லெண்ணம் ஏந்துவோம்..
சாக்கடை அரசியல் சாதனை அரசியலாக மாறும்..
வளர்ந்த நாடாக உலகில் ஜொலிக்கும்..
நம் நாட்டில் பிறந்து வாழும் எல்லோரும் இந்தியர்கள்..
நம் நாட்டு மக்கள் எல்லோரும் எல்லாமும் பெற..
ஒற்றுமையாய் வாழ்வோம்..!
அனைத்து கல்லூரிகளிலும்-அனைவருக்கும் வாய்ப்பு..
அனைத்து துறைகளிலும்-அனைவருக்கும் வேலை...
பெரும்நாடு நம்நாடு வளம் ஜொலிக்கும் நம் நாடு..
வறுமை இன்னும் இங்கே ஏது ?
என்று ஒன்று கூடி மாற்றிகாட்டுவோம்...

04 December 2010

இளைஞர்களுக்காக...

இளைஞர்களே..!
உங்கள் நம்பிக்கையை ...
       புதுப்பித்துக்கொண்டே இருங்கள்..
உங்கள் முயற்ச்சியை..
       விரிவாக்கிக்கொண்டே இருங்கள்...
உங்கள் சிந்தனையை..
       செதுக்கிக்கொண்டே இருங்கள்...
நீங்கள் வெற்றி பெறும்வரை..
       தொடர்ந்து போராடுங்கள்...
உங்கள் உழைப்புதான்..
       உலகின் தத்துவம்...
உங்கள் உயர்வுதான்...
       ஒரு நாட்டின் முன்னேற்றம்...
உங்கள் உறுதியான நிலைதான்..
        நம் நாட்டின் பாதுகாப்பு...
வாய்மை  வெல்ல..
        வாழ்ந்து காட்டுங்கள்...
இளைஞர்களே..!
       

03 December 2010

சிறந்தது எது?

அல்லாஹ்வின் நற்பெயரால்...

இறைவணக்கத்தைவிட ..
சிறந்தது எது? !!

ஓர் இறை வழங்கச்சொன்ன..
தர்மத்தைவிட சிறந்தது எது? !!

ஓர் இறை வழங்கிய மறையைவிட..
சிறந்தது எது?!!

ஓர் இறைத்தூதர்களைவிட..
சிறந்தவர்கள் யார் ? !!

தாய்யைவிட சிறந்த உறவு எது ?!!

ஒழுகத்தைவிட சிறந்த...
செல்வம் எது?!!

உழைப்பைவிட உடல் நலத்திற்க்கு..
சிறந்தது எது?!!
  
உதவும் மனம்..
உதவும் கரங்கள்..
உதவும் மனிதனாய்..
உலகில் வாழ்ந்து காட்டுவோம்..? !!