அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

29 December 2011

இஸ்லாம் மனிதர்களுக்கான மார்க்கம்...

ஓர் இறை தந்த மார்க்கம்....
ஆறறிவும் ஏற்கும்....

இறைமறை சான்றுகள்..
இறைத்தூதரின்...
பொண்மொழிகள்....

தீண்டாமை தீண்டாத மார்க்கம்...
மனிதர்கள் ஏற்கவேண்டிய  மார்க்கம்...

சகோதரத்துவம் சமத்துவம்..
ஓர் இறைவனை மட்டும்..
வணங்கும் மகத்துவம்...
மலர்ந்த சன்மார்க்கம்....

கடமை சொன்ன இறைத்தூதர்..
கடமையாகவே வாழ்ந்த...
வரலாறு தந்த மார்க்கம்...

சீர்கேட்டின் விளிம்பில் முழ்கும்..
மனிதர்களுக்கு சீர்திருத்தத்தை..
செம்மைபடுத்தும் சிறந்த மார்க்கம்...

அல்லாஹ்வின் ஆட்சியை..
அரசாலும் அதிகாரத்தை...
அற்புதமாய் அறிவிக்கும்..
அழகிய மார்க்கம்...

வணிகம்  செய்யும் முறை...
வணிகத்தில் கிடைக்கும்..
லாபவளர்ச்சியை நேர்மையை..
கொண்டு பெற்றிட சொன்ன..
படைத்தவனின் மார்க்கம்...

இஸ்லாம் ஏற்கவேண்டிய மார்க்கம்..
இஸ்லாம் மனிதர்களுக்கான மார்க்கம்..


05 December 2011

ஓர் இறைவா...! நீயும்- நானும்....

யா அல்லாஹ்..!
என் இறைவன் - நீ..
உன் -அடிமை - நான்..

படைத்தவன்- நீ..
உன்னால் படைக்கப்பட்டவன்- நான்..

புகழுக்குரியவன்- நீ..
புகழுரைப்பவன் - நான்...

கொடுப்பவன் - நீ..
பெறுபவன் - நான்..

எல்லாம்-அறிந்தவன் - நீ...
எல்லாம்-அறியாதவன் - நான்...

பலமானவன் - நீ..
பலஹீணமானவன் - நான்...

நிலையானவன் - நீ...
நிலையற்றவன் - நான்...

மறக்காதவன் - நீ...
மறப்பவன் - நான்..

மன்னிக்க கூடியவன் - நீ..
மன்னிப்பு கேக்க கூடியவன் - நான்...

தூய்மையானவன் - நீ...
தூய்மை பெறாதவன் - நான்..

இணை துணை இல்லாதவன் - நீ..
இணை துணையோடு வாழ்பவன் - நான்...

என் இறைவன் - நீ..
உன் -அடிமை - நான்....