அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

28 February 2011

அன்புள்ள சகோதரர்களுக்கு...!!!

அல்லாஹ் ஒருவனையே வணங்கிடுக..
மாநபி வழியில் நாளும் நடந்திடுக..

மாமறையை வாழ்வில் அணிந்திடுக..
ஐந்து கடமையை நிறைத்திடுக..

கற்ற கல்வியை கற்பித்திடுக..
வாழும் வாழ்க்கையை..
விளங்க விளக்கிடுக..

மனம் மகிழ்ந்து தர்மம் தந்திடுக..
செல்வம் இருப்பதில் தர்மம்..
அளப்பதில் முதன்மையாய் இருந்திடுக..

அறியாமையை இல்லாமையாய் ஆக்கிடுக..
ஒற்றுமையாய் ஒரணியில் திரண்டிடுக..

திகட்டாத இஸ்லாத்தில்..
முழுமையாய் நுழைந்திடுக...

கல்வி தோட்டத்தில்..
அறிவு கனியாய் இருந்திடுக..

அறபோராட்டத்தில் உங்கள் குரலும் ஒலிக்க..
அழைப்பை ஏற்று வந்திடுக..

இடஒதுக்கீடு கிடைக்காது நடக்காது..
முடியாது இயலாது என்ற..
விரக்தியை வீசி எறிந்திடுக....

நாளைய தலைமுறைக்கு இன்றே..
நல்வழி திறந்திடுக...

நற்பணிகள் நாளும் செய்திடுக...
நலமும் வலமும் பெற்று..
வாழ்ந்திடுக.....

24 February 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-6

கற்பனைக்க தெரியாத தூதர்..
மூடிமறைக்க தெரியாத தூதர்..
முழுமையான நிறைவான..
மகிழ்வான தீன்வழி திறந்தார்..


இறையளித்த மறைவசனங்களை..
இறையட்சத்தோடு எடுத்துரைத்தார்..

சீர்கெட்டு இருந்த சமுதாயத்தை..
சீரான மார்க்கம் கொண்டு..
சீர்படுத்தினார்..

இணைவைக்காமல் வாழ..
இனிய இஸ்லாம் மொழிந்தார்..

இறைதன்மையின் ஆற்றலையும்..
மனிததன்மையின் பலஹீணத்தையும்..
மறக்காத மறைக்காத மறுக்க முடியாத..
ஆதாரங்களை -அடுக்கிவைத்தார்..

ஏகத்துவத்தை ஏற்று..
ஏவினார்..

சொல்லாற்றலும் செயலாற்றலும்..
செம்மையாய் செய்தார்..

மனைவிமார்களின் வாழ்க்கையில்..
மனம் கோணாமல் நடந்து கொண்டார்..

உம்மி நபியாய் உத்தம நபியாய்..
உலகில் விளங்கினார்...

நீதியின் பக்கம் நிற்போராய்..
அநீதியை தடுப்பவராய்..
பகை மறபவராய்..
நல் உடையோராய்..
வெல் படையோராய்..
வாழ்ந்து காட்டினார்..

ஆளும் ஆட்சியாளனை..
அர்ஷின் அதிபதியை..
இறுதி நாளின் நீதியரசனை..
படைத்தவனை -அறிந்தவனை..
அளப்பவனை அழிப்பவனை..
மீண்டும் உயிர் எழுப்புபவனை..
வணங்கி வாழ்ந்து வாழச்சொன்ன..
அழகிய முன் மாதிரி முஹம்மத்...



21 February 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-5

ஏக இறைவனின் மறையை ஏற்று..
போதிக்கும் பெரும் பாக்கியம் பெற்றார்..

மனிதர்களில் மாணிக்கம்..
மனித நேய மனம்..
மனித நேய குணம்..
மனிதனுக்கேற்ற மார்க்கத்தை..
மரபுகளோடு விரித்தார்..

மனித குலத் தந்தை..
ஆதம் ஹவ்வாவின் வாரிசுகளான..
நாம் எல்லோரும் சகோதர சகோதரிகளே..!
என்று நன்மாராயம் நவின்றார்..

ஆரத்தழுவும் கூட்டத்தாரை..
உருவாக்கினார்...

மறுமையில் சொர்க்கத்தின் மகத்துவத்தை..
நரகத்தின் கொடுமையை நேர்வழியில்..
நீதி நெறிவழியில் மனித உள்ளத்தில்..
பதிய வைத்தார்..

ஓர் இறைவனுக்கு..
சிறப்பான தூதராய்..
சிறம் பனிந்தார்..

விண்ணுலக பயணத்தின் காட்சியை.
சாட்சியாய் விபரமாய் விவரித்தார்..

துறவி வாழ்க்கை கூடாதன்று..
மனிததேவையை மனம் ஏற்கும்..
வகையில் மனம் திறந்து..
சொல்லலானார்..

ஏக இறையோனின் மாண்புகளை..
மனிதர்களின் பண்புகளை...
பிரித்து தெரிந்து தெளிந்து-அறிவித்தார்..

சொல்லும் செயலும் பதியவைக்கும்..
ஏக இறைவனை வணங்குமாறு..
அழைப்புவிடுத்தார்..
அழகிய முன் மாதிரி முஹம்மத்..


17 February 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-4

ஓர் இறைவனுக்கு..
இணைவைக்காமல் வாழ..
இயன்றளவு சொல்லளவு..
செயல்லளவு முடியும் வரை..
முறைபடுத்தினார்...

முன்னோர்கள் வாழ்ந்த..
அறியாமையை பட்டியலிட்டார்..

பொழியும் மேகம்..
உலவும் காற்று..
விளையும் பூமி..
வாழும் உயிரினங்கள்..
அத்தாட்சிகளாக ஆதரத்தோடு
அடையாள படுத்தினார்...

கண்ணுக்கு கண் கைக்கு கை..
காலுக்கு கால் உயிருக்கு உயிர்..
என்று கட்டளை சட்டம் பிறபித்து..
குற்றம்புரிய தூண்டும் எண்ணத்தை.
அடியோடு களையடுத்தார்...

ஓர் இறைவனுக்கு..
 நாம் எல்லோரும் -அடிமையே..
என்று-அகபாவம் ஆணவம்..
கர்வம் தலைகணம் ஆதிக்கமாய்..
இருந்த மனித உள்ளத்தில்..
இருந்து தகத்தெறிந்தார்...

அடுத்தவர் பொருளை அபகரிக்க..
அனுபவிக்க அனுமதி மறுத்தார்..

ஓர் இறைவன்..
சொன்னதையும் தடுத்ததையும்..
கண்டித்ததையும் கூட்டாமல்..
குறைக்காமல் பகுத்தறிவோடு..
பகர்ந்தார்....
அழகிய முன் மாதிரி முஹம்மத்...

16 February 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-3

சாந்தியும் சமாதானமும்..
முகமன்னாக சொல்விதித்தார்..

எழுத படிக்க தெரியாத..
எம்பெருமானார்..
எளிமையில் என்னற்ற..
செய்திகளை எத்திவைத்தார்..
எடுத்துவைத்தார்..

வட்டி வாங்க கூடாது..
வட்டி கொடுக்க கூடாது..
இருவருக்கும் சாட்சியாய்..
இருக்க கூடாது என்று..
சமுதாய நலனில்..
பெரும் மாற்றத்தை..
தோற்றுவித்தார்..

விதவை வாழ்க்கை கூடாது..
என்று மறுமண வாழ்க்கைச்..
சட்டத்தை மலரச்செய்தார்..

போதை தரும் வஸ்துக்களை..
அருந்த தயாரிக்க விற்க வாங்க..
தடை செய்தார்...

 நிலுவையில் குறைப்பு கலப்பு..
செய்வதை தடுத்தார்...

ஏற்றத்தாழ்வு மிகுந்த..
சமுதாயத்தில் பிறந்து..
சமச்சீர் சமுதாயமாக..
சமநிலை படுத்தினார்..

ஒழுக்கத்தை ஒவ்வொரு முறையும்..
ஒப்பித்து கொண்டே இருந்தார்..

நேர்மையை கடபிடித்து..
கடபிடிக்கவும் சொன்னார்..

மரணத்தை மறுமையும்..
நினைத்தவாறே வாழச்சொன்னார்
அழகிய முன் மாதிரி முஹம்மத்..

14 February 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-2

ஒப்பற்ற இறைவனை..
ஒப்பற்ற மார்க்கத்தை..
பகுதறிவோடு இவ்வுலகில்..
தழைக்கச்செய்தார்...

சட்டம் இயற்றுவதிலும்..
சட்டம் பின்பற்றுவதிலும்..
மாமனிதராய் விளங்கினார்..

கல்லடியும் சொல்லயும் ஏற்று..
பொருமைக்குவுறியவரானார்..

பாவம் செய்தாவாறு..
மக்களை ஏவினார்..

ஓர் இறையை வணங்குவதில்..
ஆர்வலர் ஆனார்..

சொர்க்கம் கண்டும்..
நரகம் கண்டும்..
மக்கள் இடையே..
விழிப்புணர்வுவூட்டினார்..

உண்மையும் பொய்யும் பிரித்து..
சத்தியத்தை போதித்தார்..

அடுக்கடுக்கான..
ஆதாரங்களை கொண்டு..
அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார்..

இறைவசனங்களை...
இலகுவாக வாசித்தார்..

ஓர் இறை படைப்புகளை...
ஆதாரங்களோடு விளக்கினார்..

பொருமை அணிந்த பெருமானார்..
பெரும் புகழை..
ஓர் இறைவனுக்கே சேர்த்தார்..

இப்படி ஒரு மார்க்கம்..
இப்படி ஒரு தலைவர்..
உலகம் வியக்கும் வண்ணம்..
வாழ்ந்தார் வாழவும் சொன்னார்..
அழகிய முன் மாதிரி முஹம்மத்..

12 February 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-1

ஓர் இறைவனின்..
இறுதி இறைத்தூதர்..
இஸ்லாத்தை இவ்வுலகில்..
போதித்தார்..

ஐந்து கடமையின்..
கண்ணாய் கனியானார்..

இறைவணக்கத்தில்..
நேரம் தவறாது நிறைத்தார்..

செல்வம் இருப்பதில்..
தர்மம் அளப்பதில்..
அறிவுபூர்வமான மார்க்கத்தை..
அறிமுகபடுத்தினார்..

ஏழ்மை -அறிய..
பசி உணர..
நோன்பின் நோக்கத்தை..
நுட்பத்தை நூதனமாய்..
அறிமுகபடுத்தினார்...

இறை இல்லம் தேடி..
இறை நம்பிக்கையாளர்கள் கூடி..
நிறம் பாராது மொழிபாராது..
சகோதரதுவத்தை..
சமர்ப்பித்தார்...

உரையாற்றுவதில்..
கம்பீர கலையானர்..

போர் தொடுப்பதில்..
வெற்றி வீரரானார்..

மாற்று இனத்தாரிடம்..
பண்பாளராய் விளங்கினார்..

நீதி செலுத்துவதில்..
வாய்மையாகவே..
வாழ்ந்தார்..

அதிபதியாய் இருந்தும்..
அடக்கத்தில் ஆட்சிசெய்தார்..

11 February 2011

முயற்ச்சிப்போம் முடியும் !வரை....

பெற்றோரும் கற்றோரும்..
அறிந்தவரல்ல.....
படைத்தவனின் ரகசியங்களை...

முஹம்மத் நபிவழி வாழ்க்கை..
சொர்க்கத்தில் நாம்...

கண்ணீரில் கழுவிய பாவங்கள்..
மீண்டும் செய்யாமலிருக்க..

சூழ்நிலைகள்  மனித நேசத்தை..
போலியாக்கிவிடுகிறது...

புதுப்புது ஆசைகள் சொர்க்கவாழ்க்கை..
கேட்கிறது மார்க்கம் பேணாமல்..

நன்றி மறந்த மனிதர்கள்..
ஓர் இறைவனை ஏற்ப்பதிலிருந்து..

இறைச்சட்டம் பேணமுடியாத மனிதர்கள்..
மனிதச்சட்டத்தில் குற்றங்கள் குவிக்கிறார்கள்..

உண்மைக்கு நீதிதான் நிரந்திரமானது..
நீதிக்கு உண்மைதான் நிலையானது...

ஒன்று பட்ட சமுதாயம் ஒரணி குரல்..
நிறைவேறாத ஆசைகளாகவே இருந்தது...

தோற்றுபோனோம் மறுமை வாழ்க்கைக்கு..
நம்மை தயார்படுத்திக்கொள்ளாமல்...

மண்ணறையில் உதவுவோர் யார்?
மறுமையில் உதவுவோர் யார்?
மன்னிக்க கூடியவன் யார்?
தண்டிக்க கூடியவன் யார்?
அவன் ஒருவனே இறைவன்..

தவ்ஹீத் என்னும் தங்க விரிப்புத்தான்..
நம் வாழ்க்கை பாதை..
முயச்சிப்போம் முடியும்!வரை....


10 February 2011

அல்லாஹ்......!!!

பொருமைக்கும் பெருமைக்கும்..
புகழுக்கும் உரிய..
இணையில்லா இறையோனே..!!

உயர்வாய் மறைவாய்..
எனை காக்கும் இறையோனே..!!

எங்கள் சிந்தைக்கு எட்டாத..
ரகசியங்களை அற்புதங்களை..
அதிசியங்களை ஆச்சிரியங்களை..
வியக்க வைக்கும் ஏக இறையோன்..
வல்லோன் ரஹ்மானே..!!

கருணை கொண்ட கொடையாளனே..!!
நிலைத்தோனே நீதிமானே..!!

இம்மையிலும் மறுமையிலும்..
நிலையான ஆட்சியாளனே..!!

வானம் நீ அமைத்தது..!
பூமி நீ-படைத்தது..!
உடல் உயிர் நீ-தந்தது..!
செல்வம் நீ தந்தது..!
வருமை நீ தந்தது...!
மரணம் நீ தருவது..!

ஏக இறையோன் -அல்லாஹ்வே..!!!
உன் புகழ் பாடுவேன் உலகினிலே..!!
உன் புகழ் மட்டுமே பாடுவேன் உலகினிலே..!!!

09 February 2011

ஓய்யாத ஒப்பாரி...


வாக்கப்பட்டு போனவளே...
சோகம் கொண்டு வந்தவளே..

வரதட்சணை கேட்டாகளா..
வன் கொடுமை செய்தாகளா..
கொடுத்ததல்லாம் பத்தலயாமா....

குடிசை வீட்டு கோடிஸ்வரன்..
இருந்ததெல்லாம் கொடுத்தானம்மா..

வாயார வாழ்த்தினவுங்க எல்லாம்..
எங்கம்மா போனாங்க..

பெத்த மனம் பதருதடி..
தனியா வந்த உன்னை பார்த்து..

ஊர் வாய்யிம் ஒய்யாம..
உன் பேச்சு பேசுதடி..

நாட்டாம பஞ்சாயித்துன்னு..
நாம போய்யி நிக்கனுமடி..

வாழாம வந்துட்டான்னு..
வாய்கிழிய வசப்பாடுதடி..

மானம் கெட்டு மண்ணில் வாழ..
நம் மனசு பொருக்கலயடி..

செல்வம் கொடுத்து சேத்து வைச்சாலும்..
மனசு ஒத்து போகுமாடி..
இறக்கமில்லா மிருங்களோடு..
இனியும் வாழ...


07 February 2011

சிறந்த வரிகள்..

பிறர்க்காக வருந்த முற்படு..
அடுத்தவர் உள்ளம் உனக்காக உதவும்...

ஒப்பனையிலும் உதட்டுச்சாயதிலும்..
உலாவரும் போலிமுகப்பெண்கள்..

தோல்வி ஏமாற்றம் அவமானம்..
இயந்திரவாழ்க்கையில் தினமும்..
நான் அனுபவிப்பவை...

வாழ வந்த வீட்டில்..
அவள் விருந்தாளி...

இருட்டு வெளிச்சத்தில்..
நிலவழகு..

நிலத்தில் விளையும்..
கட்டிடங்கள்...

நகை அணிந்த நகை கடை பொம்மை..
வாங்க முடியாத மகிழ்ச்சியில் நான்....

எனக்குள் விளையும் ஆசைகள்..
அனுபவிக்க முடியாத..
அதிஷ்டசாலி நான்..

சாதனை என்பது கேட்டு பெருவது அல்ல..
உழைத்து உயரத்தை தொடுவது..

விவசாய நாடு நம் நாடு..
விளைகிறது விலைவாசிகள் மட்டும்..

மறக்க நினைக்கிறேன்..
வாழ்ந்த உலகத்தை...

கற்று கொண்ட பாடம்..
பெற்று கொண்ட அனுபவம்...

பூக்கள் பறிக்கும் கைகளிள் ஆயுதம்..
அமைதி தொலைத்த உலகம்...

 நல்லவைகளை கற்று கொள்வோம்..
கற்றவைகளை கற்ப்பிக்க செய்வோம்..

04 February 2011

அன்புள்ள சகோதரர்களுக்கு...!!!

படைத்த ஓர் இறைவன் அல்லாஹ்..!
நியமித்த   இறுதி  இறைத்தூதர் முஹம்மத் நபிக்கு..
கொடுத்த வேதம் அல்குர்ஆன்..

முஹம்மத் நபிக்கு ஒலியால் அருளப்பட்டது..
வழங்கப்பட்டது கொடுக்கப்பட்டது...

அறியாமை பாதை..
செல்வோர் கவணத்திற்க்கு..

அறிவோருக்கு ..
நேர் வழி இருக்கிறது...

தீண்டாமை இருக்காத..
இருக்க முடியாத மார்க்கம் இஸ்லாம்..

தர்மம் கொடுக்க(மாத்திரம்)சொல்லவில்லை..
அளக்கவும் சொல்கிறது...

ஐந்து கடமையின் பலன்களை..
அறிவுபூர்வமய் எடுத்துரைக்கிறது...

சிந்திப்போருக்கு சிறந்த மார்க்கம்..
இஸ்லாம் வாழ்வியல் மகத்துவம்..

விளக்கப்பட்டுவிட்டது..
முழுமையாக்கப்பட்டுவிட்டது...

மறைவாக இருந்தாலும்..
நிறைவாகத்தான் இருக்கிறது...

முஹம்மத் நபி இறைத்தூதரின்..
சமுதாய சீர்திருத்தம் சீரமைப்பு..
ஏற்க தக்க தத்துவம்..

அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்...
என்னை சார்ந்தவர் இல்லை...

வட்டி வாங்குபவர் வட்டி கொடுப்பவர்..
என்னை சார்ந்தவர் இல்லை..

 நீதி பேனாதவர் கடமை பேனாதவர்..
என்னை சார்ந்தவர் இல்லை..

மழை பொழிய்ய செய்து..
விளைய்ய செய்பவனை ஏற்காமல்..
ஏற்றும் வணங்காமல்..

பகுத்து தேர்ந்தெடுத்து சுயமாக..
ஏற்க சொல்கிற மார்க்கம் இஸ்லாம்..

நம் எல்லோர் மீதும் சாந்தியும்..
சமாதானமும் நிலவட்டுமாக...