அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

29 January 2011

சிந்திக்க மட்டும்....

பார்க்காத சொர்க்கத்தின் மீது..
யாருகுத்தான் ஆசையில்லை..
நம்பிக்கை கொள்ளாதவருக்கும்..

சிந்திக்கின்ற நேரத்தைவிட..
சீரழிகின்ற நேரம் அதிகம்..

மார்க்கம் என்பது ஏற்று அணிவது மட்டுமல்ல..
கற்று கற்ப்பித்து வாழ்ந்து காட்டுவது..

நிலையான வாழ்க்கை இல்லை..
நிலையான இளமை இல்லை..
நிலையான செல்வம் இல்லை.
நிலையான ஆசைகள் மட்டும்..
மரணம் வரை....

சமுதாய புரட்சி நலன்...
சந்தர்ப்பவாதிகளாள்..
சாக்கடையானது...

நாகரீகமாம் மேலை நாட்டு கலாச்சாரமாம்..
ஆடை குறைப்பில் என் குலப்பெண்கள்..

பழம்பெரும் பண்பாடு பகுத்தறிவு ஏற்காத..
பாழடைந்த பண்பாடு...

மறுமை வெற்றி எல்லோரும் விருப்புகிறோம்..
வணங்காமல் தர்மம் அளக்காமல்..

இறக்க பிறந்த மனிதர்கள்..
படைத்த ஓர் இறைவனை..
மறந்து வாழ பழகினார்கள்....

22 January 2011

நம் குரல்....

ஒடுக்கப்பட்டோரின் உரிமை குரல்....
செவிடர்களாய் ஆட்சியாளர்கள்....

அனைத்து கட்சி கூட்டம்..
அப்பாவி மக்களின்..
அடுத்த கட்ட ஏமாற்றம்....

பொருப்பில்லாத மனிதர்களின்...
வெருப்பான செயல்கள்....

கையூட்டு வாங்காத அதிகாரி..
சக-அதிகாரிகளாள் சபிக்கப்பட்டார்...

விலைவாசி உயர்வு...
கனவில் வாங்கிய மளிகை சாமான்கள்....

கடமையை மறந்த மனிதர்கள்...
மறுமையை போதிக்கிறார்கள்...

இழக்க வேண்டியது தீண்டாமையை..,
பெறவேண்டியது சமத்துவத்தை....

நன்றிக்கு உதாரணம்...
நாய்கள் என்கிறார்கள்..

வாங்கிய சுதந்திரம் இரவில்...
சுரண்டும் கூட்டம் பகலில்...

ஒரு வீரனின் பேச்சி...
நடத்தையில் இல்லை....

மூடர்களுக்கு ஒரு பழக்கம்..
எல்லாவற்றையும் நம்பிவிடுவது..

பகுத்தறிவாதிகள்   என்று சொல்லி...
கொள்கிறவர்களுக்கு ஒரு பழக்கம்..
குதர்க்கமாகவே கேள்வி கேட்பபது...

ஏழைகளின் வருமை..
செல்வந்தர்களின் பெருமை....

நம் நாட்டில் நாம் வாழ...
நமக்கில்லாத உரிமை...

ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம்...
ஓர் இறை கொள்கையில் தீர்வு...

21 January 2011

கற்பனையும் கருத்தும்....

ஊருக்கு போதித்தவர்..
உள்ளத்தால் உதவவில்லை...

அன்பை காட்டி கொண்டே இருங்கள்..
ஆரோக்கியத்தை பெற்று,,
கொண்டே இருப்பீர்கள்..

தர்மத்தை அளந்து கொடுங்கள்..
அன்பை அளக்காமல் கொடுங்கள்...

இரவு விழிக்கிறது உழைத்து,,
உயரவேண்டும் என்பதற்காக
லஞ்சம் வாங்கவும் ஊழல் செய்யவும்..
என்பதற்காக  அல்ல.....

திறக்காத நகை கடைபடி..
காத்திருக்கும் பெண்கள்...

பாலைவனத்தில் உழைத்து..
அனுப்பிய பணம்   நகை..
அழித்து அழித்து பன்னியவிரையும்..

குடிசைக்குள் மின்சார நிலா..
தேடுதலில் ஈடுபடும் பூனைகள்..

உயர்ந்தவனும் தாழ்ந்தவனும்..
மரணத்தில் சமமானான்....

அமைதியான முறையில் நடந்தது..
மதவாத கூட்டம்...

மக்கள் சக்தி இயக்கம்..
ஆட்டுமந்தைகளாய்..
மக்கள் இருக்கும் வரை..

தீண்டாமை திடலில்..
வாழ்க்கை விளையாடலில்..
வெற்றி கண்டது பெரும்பான்மை.....

19 January 2011

அல்லாஹ்......!!!

கருணை நிறைந்த இறைவன்...
            அல்லாஹ்..!

பொருமை நிறைந்த இறைவன்..
            அல்லாஹ்..!!

பெரும் புகழுக்கு உரிய இறைவன்..
            அல்லாஹ்..!

நாங்கள் உன்னிடமே மீழ்வோம்....
            சுபஹானல்லாஹ்...!

மாநபி வழி தந்த இறைவன்...
           அல்லாஹ்...!

இறைமறையை இறக்கிய இறைவன்..
           அல்லாஹ்...!

உடல் உயிர் கொடுத்த இறைவன்..
           அல்லாஹ்..!

நாங்கள் வணங்கும் இறைவன்..
           அல்லாஹ்..!!

நன்மை தீமை பிரித்த இறைவன்...
           அல்லாஹ்...!

ஐந்து கடமை அளித்த இறைவன்..
           அல்லாஹ்....!

வணங்குதல் ஒன்றே உனக்களிப்பேன்..
நன்றி கொண்டு வாழ நான் மறப்பேனா..

உன் புகழ் உலகம் நிறைக்க..
உன் அடிமை நானாக இருப்பேன்....

18 January 2011

தேர்தல்-அரசியல்வாதிகள்-மக்கள்..

உள்ளம் உண்மை சுமக்கிறது..
நாக்கு மட்டும் மறுப்பு-அறிக்கை...

வாக்காளர்கள் வசதி பெருவார்கள்..
ஓட்டுக்கு விலை நிர்ணயம்..

வாக்காளருக்கு அளித்த வாக்குறுதி..
அன்றே அப்பவே நிறைவேற்றபட்டது...

தேர்தல் பிரச்சாரம் நடிகர் நடிகைகள்..
கூட்டகூட்டமாய் பொதுமக்கள்...

ஜாதி தலைவர்களுக்கு அவசர அழைப்பு..
ஆதரவு அளிக்க பல கோடியில் நன்கொடை...

தேர்தல் அறிக்கை..
மகிழ்ச்சியில்  பொதுமக்கள்..

தேர்தல் வாக்குறுதி..
மறந்துபோன பொதுமக்கள்...

வெள்ள நிவாரணம் பங்கீட்டு கொண்ட..
ஆட்சியாளர்கள் அதிகாரிகள்...

நல்ல பண்புள்ள நேர்மைகொண்ட...
அரசியல்வாதிகள்......
வேட்பாளராய் இருக்கும்வரை..

பதவி ஆசையில்லாத அரசியல்வாதிகளுக்கு..
பலகோடியில் சொத்து..

அமைச்சர் மறந்த தொகுதி..
நினைவூட்டிய நிருபர்கள்...

நல்லவைகளை செய்தால்..
குறை சொல்லும் அரசியல்வாதிகள்..
நல்லவைகளை செய்யாமல் இருந்தால்
குறை சொல்லும் பத்திரிக்கைகள்..

தேர்தல் ஆணையம் புதிய கட்டுபாடு..
அறிக்கையில் மட்டும் அரங்கேறியது..

அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்குகின்ற..
அனாதைகளை போல..
நல்லோர் ஆள ஏங்குகின்ற இந்தியா,,,,,

17 January 2011

சகோதரர்களே. உங்களுக்காக...

விடியலுக்கு முன்னே விழி..
விரைய்வாய் செயல் படு..
விளைவுகளை எதிர்கொள்..

இஸ்லாம் ஏற்று..
ஓர் இறை வணங்கு..
அளவாய் பேசு..
நிறைவாய் பழகு..

அறிவாய் செயல் படு..
அமைதியை நாடு..
உண்மையை நேசி..
உழைப்பாள் உயரு..

உறுதியாய் இரு..
கடந்த காலத்தை படி..
நிகழ்காலத்தை பார்..
வருங்காலத்தை நலமாக்கு..
வலமாக்கு..

சுத்தம் செய்..
சுகாதாரத்தை கவனி..
ரத்தம் கொடு..
யுத்தம் நிறுத்து..

அன்பை விரி..
மகிழ்ச்சியை மலரச்செய்..
வருமை ஒழி..
புதுமை செய்..

தர்மத்தை கொடு..
ஒழுக்கத்தை பேணு..
நீதியை நிலை நாட்டு..
நல்லிணக்க நட்பை திற..

புறம் பேசாத..
கோல் மூட்டாத..
இட்டு கட்டாத..
கர்வம் கொள்ளாத..
இணை வைக்காத..
வாழ பழகு......

ஹைக்கூவில் ஒரு கலவை...

என்றைக்கோ பெய்த மழை..
இன்று நனைகிறேன்..
மாற்று உடை இல்லாமல்...

ஏழையின் கனவில்..
குறைவான ஆசைகளே..
வருமைக்குள் வலம் வந்தது...

உதரிய்ய பூக்கள்..
சிதரிய்ய புன்னகை...

அன்பு அறிவு அமைதி அடக்கம்..
உழைப்பு உண்மை உறுதி உயர்வு தரும்..

கல் சிற்பி சிலை சிற்பம்..
சிலைகள் மறுக்காதவரையில்....

பணம் சொத்து உடமை..
அணிந்து அனுபவிக்கும் ஆசை..
உயிர் இருக்கும் வரை...

பஞ்சம் லஞ்சம் ஊழல் வருமை..
கொலை கொள்ளை வட்டி பசி..
இல்லாத உலகம் என் கனவில்..
நடந்தேறிய உண்மை..

பூ மணம் புன்னகை மென்மை..
தேன் அழகு கலை ஆயுள்..
ஒரு நாள் வாழ்க்கை...

16 January 2011

நாடும் நடப்பும்.....

 நிலவை மோசடியில் கூட்டுறவுகள்..
வட்டியின் வளர்ச்சியில் செல்வந்தர்கள்..
அனைத்து துறைகளிளும் ஊழல்கள்..

லஞ்சத்தில் அரசு துறைகள்..
ரவுடிகளை பனியமர்த்திய்ய வங்கிகள்..
வாக்குறுதிகளை வாரி இறைக்கும் கட்சிகள்..

காவல்துறை கண்கானிப்பில் நடந்த நிகழ்வுகள்..
தூர்வார்படாத குளங்கள்...
ஆற்று மணலில் அரசியல் நாடகம்..

ஒரு நாள் முழுவதும் கையேந்தி பிச்சை எடுத்தும்..
ஒரு வேலை சோற்றுக்கு சேராத பணம்..
நாகரீகத்தை உடுத்திய மனிதன்..
ஒழுக்கத்தை இழந்தான்..
வட்டியை பெருக்க நினைத்த மனிதன்..
தர்மத்தை மறந்தான்....

உயிரை கூட மனிதன்..
உணர தவறிவிட்டான்...
மரணத்தை மறந்த மனிதன்
பகிர்ந்து வாழ மறந்தான்....

15 January 2011

உண்மைகள்...

குண்டு மழையிலும்..
பீரங்கி தாக்குதலிலும்..
உயிரை துளைக்கிற..
துப்பாக்கி முனையிலும்..
வாழ்ந்து பழகிப்போன..
பாலஸ்தீனர்கள்....

ஆப்பிரிக்க மக்களின்..
வருமை கண்ட நான்..
கண்ணீரில் முழ்கினேன்..

என் கண்ணீர் எழுதிய..
கண்ணீர் மழையில்..
ஈராக்கில் வெள்ளம்..

ஆப்கானிஸ்தான் மக்களின்..
உறுதியான உள்ளம் கண்டு..
உருகிதான்போனேன்..

மண்ணுரிமை போராட்டம்..
இனப்போராட்டமாக மாறி..
இனவெறியாக மாறி..
இனபடுகொலையாக..
உருவெடுத்து அகதிகளை..
அதிகபடுத்தியது இலங்கை...

இந்தியா ஏழை நாடு..
ஏழைகளை ஏழைகளாகவே....
வைத்திருக்கும்....
ஏழை நாடு இந்தியா....

14 January 2011

ஓர் இறை நம்பிக்கையாளர்களே....!

இஸ்லாம் கேட்கிறது..
நீங்கள் எந்த மார்க்கத்தை..
பின்பற்றுகிறீர்கள்..

உண்மையை உங்கள்..
உள்ளத்தோடு உரசி பாருங்கள்..
தெரிந்து தெளிந்து மாநபிவழி நடந்தால்..
மறுமை வெற்றி நமக்குத்தான்..

பெண்வீட்டார் வீடு கொடுக்கும் முறை..
மாப்பிள்ளை வீட்டார் வீடு வாங்கும் முறை..
ஒரு சில ஊர்களிள் இருக்கத்தான்..
செய்கிறது....

நம் சமுதாய பெரியார்களே...
நீங்கள் இன்னும் எத்தனை ஆண்டு காலம்தான்..
அறியாமையில் வாழ்வீர்கள்..
வாழச்சொல்வீர்கள்..

அல்லாஹ்வின் வேதத்தை..
கற்க நேரம் ஒதுக்குவோம்..
அறிந்து வாழ்வதற்கு ஆய்வு செய்வோம்..
நபிவழி நடக்கும் சமூகமாக..
மாற்றி காட்டுவோம்....

இணைவைப்பதிலிருந்து விடுபட..
வட்டி வாங்குவதிலிருந்து விடுபட..
வரதட்சனைவாங்குவதிலிருந்து விடுபட..
தர்கா வழிபாட்டில் இருந்து விடுபட..
இந்த சீர்கெடுக்கும் கலாச்சாரத்தில் இருந்து..
ஏன்?   இன்னும்  விடுபடமுடியவில்லை........

12 January 2011

ஹைக்கூவில் ஒரு குரல்...

ஹைக்கூவில் ஒரு குரல்.....

அதிகாலை சோம்பேறி நான்..
ஒய்வு எடுக்க ஒய்யாமல்..
உழைக்கிறேன்....

நேற்றைய்ய சம்பவம்..
இன்றைய்ய நிலை..
நாளைய்ய மாற்றம்...

கண்ணாடியில் முகம் பார்த்தேன்..
இதயத்தில் உன் உருவம்..

பால் பவுடர் குடித்து வளர்ந்த...
குழந்தையின் தாய் பாசம்...

அன்பும் அரவனைப்பும்..
ஆற்ற வேண்டிய தாய்..
விலை பேசி விற்றால்..

முதியோர் இல்லம்..
அதிகம் திறந்த பட்டியலில்..
இந்தியாவுக்கு முதலிடம்....

லஞ்சம் வாங்கிய போது பிடிப்பட்ட..
லஞ்ச ஒழிப்பு அதிகாரி....

எடை குறைப்பு செய்யாத..
கூட்டுறவு அங்காடி ஊழியர்...

லஞ்சம் கொடுக்காத வாங்காத..
நிலம் பத்திர அலுவலகத்தில்..
பத்திரம் பதிவு செய்து வாங்கப்பட்டது...

நெஞ்சம் பொருக்குதில்லை..
அறியாமை சமூகத்தின்..
அவலங்ளை..............

10 January 2011

நிகழ் காலத்தின் வெளிச்சம்....

இதுவும் ஒரு உண்மை..
மார்க்கத்தை புறந்தள்ளி விட்டு..
சமுதாய சீர்கேட்டை.....
காலகாலமாய் நடைமுறை படுத்தும்..
நம் பெருமக்கள்...
இதுவும் ஒரு உண்மை..

சமாதிகளிள் கையேந்தி..
படைத்தவனிடம் சிபாரிசு..
செய்ய சொல்லும் அறியாமையிலும்..
நம் பெருமக்கள்...
இதுவும் ஒரு உண்மை..

கட்சிகளாய் காட்சிகளாய்..
இயக்கங்களாய் பிரிவுகளாய்..
கோஷ்டிகளாய் துண்டு துண்டாய்..
சிதறி கிடக்கும் நம் பெருமக்கள்..
இதுவும் ஒரு உண்மை....

வரதட்சனை மனிதாபிமானம்..
தொலைத்த மனிதர்களின்..
மார்க்கம் அறியாத அல்லது..
அறிந்தும் அறியாத..
குருடர்களாய் செவிடர்களாய் பேரம்..
 பேசும் நம் பெருமக்கள்...
இதுவும் ஒரு உண்மை....

08 January 2011

படிக்க பயன்பெற....

ஆதம் ஹவ்வா வாரிசுகள்...
சீர்கேட்டின் சீற்றத்தால்....
அடித்து செல்லப்பட்டார்கள்...

உலகபிரமாண்டத்தை சிந்திப்போர்..
சிறந்த மார்க்கத்தை தேர்ந்தெடுப்பர்..

பிறப்பிடமும் இறப்பிடமும்..
அறியாத அறியமுடியாத..
பகுத்தறிவாளர்கள்...

நிலைகள் மட்டும் நிலைத்தே இருக்கிறது..
அன்பு அறிதாய் இருக்கிறது..
ஆவல்கள் அதிகமாக இருக்கிறது...

ஆடுவோரும் பாடுவோரும்..
அறிவதில்லை ஏழையின் பசியை...

பூக்கள்தான் புன்னகைகிறது..
மனிதர்கள் பறிப்பதற்காக...

காகித பட்டறையில்..
கல்வி விதை....

உண்மை பேசுமா?
நீதி வெல்லுமா?
நம் நாட்டில்...??

பல தோல்வியில்தான்..
வெற்றி இருக்கிறது...

நம்பிக்கையில் இருந்து..
முயற்சியில் தொடங்கு..
உழைப்பில் தொடரு..
வெற்றியில் முடியும்....

07 January 2011

ஏகத்துவம் ஒரு விளக்கம்....!

ஓர் இறைவன்...

அல்லாஹ் படைத்தவன்..
பராமரிப்பவன்..

அளந்தவன் அளப்பவன்..
அறிந்தவன் ஆழ்பவன்..

அழிப்பவன் உயிர் எழுப்புபவன்..
புகழுக்கு உரியவன்..

புகழ் அல்லாஹ்வுக்கு உரித்தானது..
புகழ் எவருக்கும் செலுத்த இயலாது..
முடியாது கூடாது...

நம் தூதருக்கு வஹி மூலம்..
வழங்கிய அழகிய அல்குர்ஆனில்..
அடுக்கடுக்கான ஏராளமான..
வசனங்கள்  சிறந்த  ஆதாரங்கள்..

இதுதான் ஏகத்துக்கும் தத்துவம்..
ஏகத்துவம் ஒரு விளக்கம்..

எது? இணை வைத்தல்..
எது? இணை வைத்தல்லாகது..

ஓர் இறை நம்பிக்கையாளன்..
ஏன்? மனித புகழ் புகட்ட வேண்டும்..

ஏன்? சமாதான சாதூர்யத்தை கொண்டு..
புகழை பிரித்து விளக்கத்தை..
விரிவாக்க வேண்டும்..

சிந்திக்க சிதைக்காமல் இருக்க..
ஓர் இறை போற்ற..

ஓரணியில் திரள..
ஓர் ஆய்வுக்குள் ஒன்று பட்டு வாழ..
ஓர் இறை துணை வேண்டும்....

06 January 2011

சிந்திக்க மட்டும்....

எழுதுகிறேன் எழுச்சி பெறாத...
என் சமூகத்தின் வெளிச்சத்தை...

அன்பை எல்லோரும் போதிக்கிறார்கள்..
போர் குணம் படைத்தவர்களாய்....

ஆசைக்கு எல்லாம் தேவை..
முடியாமைக்கு எல்லாம் தேவையில்லை...

குழந்தையின் கதறல்..
மறுக்கப்பட்ட தாய் பால்...

சிலர் எழுதுவதை..
பலர் படிப்பதில்லை....

அறிந்தவர்கள் செயல் படவில்லை..
அறியாதவர்கள் அறிய முற்படவில்லை...

கணத்துப்போன பாவங்கள்..
மறுமை குற்றவாளியாய் மனிதர்கள்...

நேசத்தை சந்தேகிப்பது நல்லது..
போலியை வெளிப்படுத்தும்...

தாய் சுமந்த தனயன்..
தனயன் செலுத்தாத நன்றி கடன்...

கற்காத கற்ப்பிக்கும்..
முயற்சியில் வெற்றி...

மாணவிகள் மாணவர்களை..
குறைவான மதிப்பெண் பெற..
வாய்ப்பளித்தார்கள்...

இளைஞர்களின் இளமை காலத்து கனவு..
கற்பனை இல்லாமல் இருந்தது...

மனிதர்களுக்கு மன்னிக்க தெரியவில்லை..
மன்னிக்க கூடிய ஓர் இறைவனிடம்..
மன்னிக்க கேக்கவும் தெரியவில்லை....

05 January 2011

அறிந்தும் அறியாமலும்....

 நேசிக்க தெரியாதவர்கள்..
 சுவாசிக்க தெரியாதவர்கள்..

உண்மை வெளிச்சம் கொண்டவை..
தாமதமாய் வெளிபடுத்தும்..

பிறப்பில் தொடங்கிய பயணம்..
இறப்பில் நிறைவடைந்தது..
வாழ்க்கை பதிவுகள்...

பொருமையும் சோம்பேறியும்..
பிரித்து பார்க்க முடியாதவை..

உன் நேசத்தில் மகிழ்ந்தேன்..
உன் வெருப்பில் மகிழ்ந்து..
கொண்டியிருகிறேன்.....

தங்கம் பசியை போக்கவில்லை..
அணிந்து மகிழ அள்ளள் படும்..
மனிதர்கள்....

தேடுதல்தான் வெற்றியின்..
இலக்கை அடைய்ய முடியும்..

நம்பிக்கையோடு முயற்சித்தால்..
வெற்றிதான் எல்லை.....

ஒழுக்கத்தை எப்போதும்..
உரசி பார்க்கும் நம் பலவீணம்..

காதலில் ஒரு முறையாவது..
தோற்றுவிடு நெறியான வாழ்க்கைக்கு..
உதவி புரியும்....

அறியாதவன் எழுதியதை..
அறிந்தவர்கள் கருத்துரைக்க..
வாக்களிக்க வாய்ப்பு.....

04 January 2011

இளைஞர்களே..! உங்களுக்காக...

உன் சொல்லும் செயலும்..
வரலாறு வரவேற்க வேண்டும்..

கற்பனையில் கூட உன் மானத்தை..
விற்பனை செய்து விடாதே..

பூக்களுக்கு ஒரு நாள் வாழ்க்கை..
அது கூட புன்னகையோடு..
மரணிக்கிறது...

நன்றி கெட்டவனாய் வாழ்வதை விட..
நல்லவனாய் மரணித்து விடு....

நீ-வாழும் போதே உன் தர்மம்..
ஏழையை வாழவைக்க வேண்டும்..

உனக்கா வாழுகிற வாழ்க்கை..
உறவுக்காக வாழுகிற வாழ்க்கை..

உற்றார்க்காக வாழுகிற வாழ்க்கை..
ஊருக்காக வாழுகிற வாழ்க்கை..

உலகுக்காக வாழுகிற வாழ்க்கை..
எதையும் உதறிவிடாதே...

புத்தக மோகம் எழுத்து தாகம்..
படிக்கும் பாகம் கற்று கற்ப்பிக்கும்..
கல்வி பரிமாணம் உனக்குள்..
இருக்கும் செல்வம்......

03 January 2011

இதப்படிங்க முதல்ல......

விடியல் சொன்னது..
உழைத்து வாழ் என்று....

உண்மை உள்ளத்தில்...
சுமந்தே வாழ்....

விளைவுகள் விளைகிறது...
சந்தர்ப்பவாதிகளாள்...

பதவி என்பது பரிசோதிக்கும்..
இயந்திரம் போன்றது....

பதவி கொடுத்து...
சோதித்த பொதுமக்கள்..
பொதுமக்கள் சுமக்கும்..
சோதனைகள்...

ஆளும் ஆணவம் கர்வம்..
ஊழல்களாக உருவெடுத்தது...

வியாபார விளிம்பில்..
வணிகமானது..
மனித சிந்தனைகள்...

உழைக்க மறக்கவும் மறுக்கவும்..
இலவசம் உதவி புரிகிறது...

லச்சம் கோடி ஊழல்..
நீதி மன்றங்கள் விலை பேசப்படும்..
சட்டம் எங்கே? தண்டனை வழங்குவது...

முப்படை கொண்டும்..
அழிக்க ஒழிக்க முடியாத..
நம் நாட்டின் லஞ்சம்...

வழிபறி கொள்ளையர்களின்..
வலமான வாழ்வு...

நம் நாட்டு கலாச்சாரத்தை..
கட்டிக்காக்கும் நடிகைகள்..

கடந்த காலத்தை படிக்கும்..
இளைஞர்கள் வருங்காலத்தை..
படிக்கவில்லை....

01 January 2011

ஆறாவது -அறிவு....

ஏதோ உனக்கு..
கோளாரு இருக்கிறது..

சிந்திக்காத தடம் புரளும்..
உன்னை என்ன செய்வது..

மறக்க பிறந்த -அறிவாய்..
நீ ஏன்? இன்னும் இருக்கிறாய்..

சொல் காத்து வாழ..
செயல் காத்து வாழ..

உலகில் அமைதி நிலவ..
மனிதனுக்குள் தழைக்காமல்..
விதையாகவே இருக்கிறாய்...

உன் மீது போர் குற்றம்..
சுமத்தினால் என்ன தவறு..

விண்ணுக்கு சென்று வர..
உதவியது நீ...

மண்ணுக்குள் மகிழ்ந்து வாழ..
மனம் வைக்கலாகதா..?

நாகரீக கலாச்சார நச்சை..
அரை நிர்வாண இழுக்கை..
மதம்- நிறம்-மொழி-வெறி-கொச்சை..
வளர்ச்சி என்று வர்ணிக்கிற..
உன்னை தேவை என்பதா ..?

நீ-எனக்குள் இல்லை என்றால்..
முழு மனிதனாக இருக்க..
வாய்ப்பு இல்லை...

நீ நானாக மட்டும் இல்லாமல்..
நாங்களாக நன்மையாக..
நட்பாக நலமாக வலமாக..
எல்லோருக்குள்ளும்..
குடியேறி விருட்சமாய்..
விழித்தெழு உலகில்..
அமைதி அறவ உன் சேவை..
தேவையாக இருக்கிறது....