அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

06 April 2011

சிந்திக்க மட்டும்....

எளிமையாய் பேசும்.
அரசியல்வாதிகளின்..
அலங்கார ஆடம்பர வருகை...

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட..
மக்கள் பிரதி்நிதி....
தன் குடும்ப வளர்ச்சிக்கு பாடுபட்டார்....

கல்வி கண்கள் என்கிறார்கள்...
கல்லூரிகள் குருடர்களாய்...
வாழச் சொல்கிறது...

சந்தேகத்தை அணிந்தவன்...
சந்தோசத்தை இழந்தான்..

அன்பை பெறாத வரை..
அனைத்தையும் பெறமுடியாது...

மன்னிப்பதை மறந்து விடாதீர்கள்..
உங்கள் சுயநினைவில்..
சொருகிவிடுங்கள்...

மகிழ்ச்சி வெள்ளத்தில் நீச்சல் தெரியாத..
மனநோய்காரன் ...

குடித்தவனின் உளரலில்..
உண்மை மட்டுமே இருந்தது....

கற்பனையில் கூட பொய் கலக்காத..
கவிஞர்கள் கூட்டம்...

இழக்க வேண்டியது தீண்டாமையை..
பெறவேண்டியது சமத்துவத்தை..

விழுந்த மழை..
எழுந்த விதை...

தர்மம் செய்ய துடித்தேன்...
செல்வம் இல்லாத போது...

சேவை செய்ய துடித்தேன்..
பதவியில் இல்லாத போது...

வருமையை வாழ வைக்கும்..
ஆட்சியாளர்கள் இலவசம்..
வழங்குகிறார்கள்...

பெற்றெடுத்த குழந்தை..
குப்பை தொட்டி காப்பகத்தில்...

பிச்சை எடுத்து வாழ நம் நாடு..
நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது...

கடமை செய்ய கை நீட்டும்..
நம் நாட்டு -அதிகாரிகள்...

மனிதர்கள் இருக்குமிடம்..
நாய்கள் ஜாக்கிரதை....

ஆயுதம் ஏந்திய போராட்டம்..
அமைதிக்கு வழி வகுக்காது....

03 April 2011

எந்தாயி நீ் என்ன செய்வ..

 அடி பெத்தவள..
பெயர் தாங்கியா வளர்த்தவள..
மார்க்கம் தெரியாம வளர்த்தாயடி...

அல்லாஹ்தான் இறைவன் என்று தெரியும்..
ஐய்வேல தொழுகைக்கு போகம..
நான் தொலைச்ச காலத்த யாரடி கொடுப்பா...

நபிவழி நடக்காம நண்பர்களோட..
நான் கழிச்ச நேரத்த நான் எப்படி சொல்ல..

இணையில்லா இறைவனுகிட்ட கேக்காம...
தர்காவுக்கு கூட்டிக்கிட்டு போய்யி...
பாவாகிட்ட கையேந்தி கேக்க வைச்சி...
அல்லாஹ்வுடைய கோபத்துக்கு..
ஆளாக்க வைச்சயடி....

சந்தன கூடுக்கு கூட்டிக்கிட்டு போய்யி..
தேர்யிழுக்க வைச்சயடி..

தொழுகைக்கு என்ன ஓதனுன்னு..
தெரியாம செய்கை தொழுகை..
தொழுது வந்தேன்னடி....

ஐந்து கடமை தெரியாம...
மா நபி வழி நடக்காம..
நேர்வழி தெரியாம..
எல்லா வழியிலும் நடந்தேன்னடி....

மறுமை வாழ்க்கை உண்டுன்னு சொல்றாங்க..
சொர்க்க வாழ்க்கை உண்டுன்னு சொல்றாங்க..
நரகவாழ்க்கையும் உண்டுன்னு சொல்றாங்க..
நம் பாவம் மன்னிக்க படைச்சவனயே கேப்போமடி..

உந்தாயி சொல்லி கொடுக்காம..
எந்தாயி நீ என்ன செய்வ...