அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

31 December 2012

யா அல்லாஹ்..!எல்லோரும் எல்லாமும்..
 
பெற வேண்டும்..

எல்லா புகழும் உனக்கே..
 
உரித்தாக்க வேண்டும்..

அமைதி எங்கும் நிலவ வேண்டும்..

எங்கள் பாவங்களை..
 
நீ மன்னிக்கவேண்டும்..

கேலியும் கிண்டலும் புறம் பேசுதலும்..

எங்களை விட்டு விலக வேண்டும்..

ஐந்து கடமையை பேணுவோராய்..

நாங்கள் வாழவேண்டும்...

முப்பொழும் உன் நினைவில்..

எங்கள் வாழ்க்கை வேண்டும்..

நூர் முஹம்மதின்..
 
அழகை காணவேண்டும்..

அந்த ஆனந்தம் தழைத்து..
 
 நிலைக்கவேண்டும்..

மறுமை வெற்றியாளர்களாய்..

உன்னை சந்திக்கவேண்டும்...

உன்னை சந்தித்த மகிழ்ச்சி விளிம்பில்..

நாங்கள் மிளிரவேண்டும்...

இம்மையிலும் மறுமையிலும்..

உன் -அடிமையாகவே நாங்கள்...

உன் புகழை போற்றவேண்டும்..

08 December 2012

எங்கள் முஹம்மத்(ஸல்) -அழகிய முன் மாதிரி..!

ஒப்பற்ற இறைவனுக்கு..!
...

ஒளிமையமான இறைவனுக்கு..!

உலகம் நிறைக்க...

புகழ் சேர்த்த உத்தமர்..

தூய்மையான இறைவனுக்கு..!

தூதராய் பணியாற்றிய...

நபித்துவத்தின் நன்மாராயம்..!

படைப்புகளை வணங்கி வந்த..

மனித சமூகத்தில்..

படைத்தவனை வணங்கச்சொன்ன..

இறுதி இறைத்தூதர்...!

சொல்லெறிந்து தூற்றியபோதும்..

கல்லெறிந்து பல் உடைந்தபோதும்..

சத்தியத்தின் பால் -அழைத்த...

சிறந்த போதகர்...!

அல்லாஹ்வின் அடிமை என்று..

அழைக்கச்சொல்லி மகிழ்ந்த..

மாமனிதர்...

நீதியை நிலைனாட்டி..

நீதியை பேணச்சொல்லி...

நீதியாகவே வாழ்ந்த வரலாறு..!

சத்தியமார்க்கத்தின்..

சாதனை பெட்டகம்...

அறிவுடையோருக்கு..

நேர்வழிக்காட்டி..

அச்சமூட்டி எச்சரிக்கை செய்த...

எங்கள் முஹம்மத்(ஸல்)

அழகிய முன் மாதிரி...

07 December 2012

டிசம்பர் -6- மறக்கமுடியுமா...பாபர் மசூதியை மட்டுமா இடித்தீர்கள்..

இந்தியாவின் ஜனநாயகத்தை இடித்தீர்கள்..

...
மத நல்லிணக்கத்தை இடித்தீர்கள்...

நீதி மன்றங்கள் மீது நாங்கள் வைத்திருந்த..

நம்பிக்கையை இடித்தீர்கள்...

இடித்தவர்களுக்கு இரண்டு பங்கும்..

இழந்தவர்களுக்கு ஒரு பங்கும் வழங்கிய..

நீதிமன்ற தீர்ப்பு உலகில் தலைகுனியவைத்தது...

அரசியல் தலைவர்கள் எல்லாம் ஓட்டு பொருக்கிகளாய்..

இருந்துவிடாமல் பாபர் மசூதியை மீட்க உங்கள் குரலும்..

ஒலிக்கவேண்டும் நீதியின் பக்கம் மாற்று மத சகோதரர்களே.!

நடு்நிலை கொண்ட ஊடகங்களே உங்கள் குரலும் இன்றே..

இப்பவே ஒலிக்கவேண்டும் பாபர் மீட்ககும் வரை....

எங்கள் குரல் ஓயாது் எங்கள் உள்ளத்தை விட்டு அகலாது..