அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

28 February 2013

யா அல்லாஹ்..!

யா அல்லாஹ்..!

அளவற்ற அருளாலனும்..!

நிகரற்ற அன்புடயோனும்..!

... உன் நற்பெயரால்..!

தொடங்குகிறேன்..!

எல்லாம் படைத்து..!

எல்லாம் கொடுத்து..!

எங்களுக்கு உயிர் தந்த..

எங்கள் இறைவா..!

எங்கள் உயர்வா..!

எங்கள் நம்பிக்கையை..

எங்கள் உள்ளத்தில்..

பலப்படுத்துவாய்..!

உன்னிடம் மீளும்போது..

நீ விரும்பிய அடியானாக..

எங்களை மீளச்செய்வாய்..!

சொல்லும் செயலும்..

பதியவைப்பதில்..

நீயே சிறந்த நீதிமான்..!

மரணிக்க பிறந்த..

மனிதர்கள்தான் நாங்கள்..

நிலையான உன்னை..

வணங்கி வாழச்செய்வாய்..!

எண்ணமுடியாத அத்தாட்சிகளை..

வழங்கி சிந்திக்கவைத்து..

ஏற்கச்சொல்லி முஹம்மத் நபிவழி.

வாழச்சொல்லிய நீயே.!

எங்கள் இறைவன்..!

வல்லமையும் தூய்மையும்.!!

உன்னக்கே பொருந்தும்.!!!.

06 February 2013

யா அல்லாஹ்..!நீதியும் அநீதியும்..

நீ நன்கறிந்தவன்..

... சத்தியமும் அசத்தியமும்..

நீ பிரித்தறிந்தவன்..!

உன் நீதிமன்றத்தில்..


நீதி மட்டுமே வென்றெடுக்கும்..

சூழ்ச்சிகார்களுக்கெல்லாம்..

நீ சூழ்ச்சிகாரன்..

உன் தீர்ப்பு அளவிடமுடியாதது..

உன் தீர்ப்பை நிராகரிக்கமுடியாது..

அந்நாளில் நீயே நீதியரசன்..!

பதியவைப்பதிலும்..!

சாட்சியாயிருப்பதிலும்...!

நீ பேராற்றல் உடையவன்..!

நீ மன்னிக்ககூடியவன்..!

நீ தண்டனை தாங்கமுடியாதது..!

அறிந்தவர்களில் நீயே சிறந்தவன்..!

நிலைத்தவனும்...

நீதியை காப்பவனும்..!

நீ ஒருவனே..! ஞானத்திலும்..

விஞ்ஞானத்திலும் உன் வல்லமை..

அளவிடமுடியாதது..

மிக பெரியோனும் தூயவனும்..!

எங்கள் இறைவனாகிய..!

நீயே எங்கள் துணை..!

எங்கள் முஹம்மத்(ஸல்) -அழகிய முன் மாதிரி..

ஏக இறைவன்..

... அகிலத்தாருக்கு...

அருளிய அருட்கொடை..!

உண்மையான இறைவனை..!

உறுதியான மார்க்கத்தை..

உளம் நிறைக்கச்செய்த..

உயர்ந்தோனின் தூதர்...!

அறியாமையில் முழ்கியிருந்த..

அரேபிய மக்களுக்கு..

அழகிய இஸ்லாத்தை..

அள்ளி வழங்கிய..

அறிவு களஞ்சியம்..

தீன்னெறி தீபத்தை ஏற்றிய..

களங்கரை விளக்கம்...

விண்ணகத்து நிலவை..

தன் இருவிரகளால் பிளந்த..

நூருன் நபி...!

அல்லாஹ்..!

ஆணையிட்டதை..

அர்ப்பணித்ததை..

கண்டித்ததை மறக்காது..

மறைக்காது மறுக்காது..

மொழிந்த மாண்பு..!

வலிமை வாய்ந்த..

ஓர் இறைவனை..

எளிமையில் எடுத்துரைத்த..

எங்கள் முஹம்மத்(ஸல்)

அழகிய முன் மாதிரி..!!


அழகிய முன் மாதிரி..

ஏக இறைவன்..

... அகிலத்தாருக்கு...

அருளிய அருட்கொடை..!

உண்மையான இறைவனை..!

உறுதியான மார்க்கத்தை..

உளம் நிறைக்கச்செய்த..

உயர்ந்தோனின் தூதர்...!

அறியாமையில் முழ்கியிருந்த..

அரேபிய மக்களுக்கு..

அழகிய இஸ்லாத்தை..

அள்ளி வழங்கிய..

அறிவு களஞ்சியம்..

தீன்னெறி தீபத்தை ஏற்றிய..

களங்கரை விளக்கம்...

விண்ணகத்து நிலவை..

தன் இருவிரகளால் பிளந்த..

நூருன் நபி...!

அல்லாஹ்..!

ஆணையிட்டதை..

அர்ப்பணித்ததை..

கண்டித்ததை மறக்காது..

மறைக்காது மறுக்காது..

மொழிந்த மாண்பு..!

வலிமை வாய்ந்த..

ஓர் இறைவனை..

எளிமையில் எடுத்துரைத்த..

எங்கள் முஹம்மத்(ஸல்)

அழகிய முன் மாதிரி..!!

19 January 2013

எங்கள் முஹம்மத்-அழகிய முன் மாதிரி..!

வான் மறையை தாங்கி..
...
வாழ்வதற்கு வழிகாட்டிய..

வல்லோனின் தூதர்..

மனித சமூகத்தை..

சிந்திக்கச்சொல்லி..

சீரான மார்க்கத்தை..

சிறப்பாய் போதித்த..

சிறந்த நெறியாளர்..!

வானகமும் வையகமும்..

இடையில் உள்ளவைகளும்..

ஓர் இறைவனின்....

கட்டுப்பாட்டில் உள்ளவை..

என்று வியக்க வைத்த..

உம்மி நபி..

படைத்தவனின் பெருமையை..

பொருமையை கொண்டு..

போதித்த பெருமானார்(ஸல்)

மனிதர்களில் தனித்து விளங்கினார்..

ஏக இறைவனுக்கு அஞ்சுவோராய்..

முப்படை வந்த போதிலும்..

முன்னின்று போர் தொடுக்க துணிந்த..

வீரத்தின் விளை நிலம்..

ஒரே இறை ஒரே மறை..

ஒரே முறை என்று..

எளிமையில் ஆட்சி..

வலிமையான சட்டம்..

வலைந்து கொடுக்காத....

வாய்மையை வென்றெடுத்த..

வரலாறு எங்கள் முஹம்மத்..!

அழகிய முன் மாதிரி..!!

31 December 2012

யா அல்லாஹ்..!எல்லோரும் எல்லாமும்..
 
பெற வேண்டும்..

எல்லா புகழும் உனக்கே..
 
உரித்தாக்க வேண்டும்..

அமைதி எங்கும் நிலவ வேண்டும்..

எங்கள் பாவங்களை..
 
நீ மன்னிக்கவேண்டும்..

கேலியும் கிண்டலும் புறம் பேசுதலும்..

எங்களை விட்டு விலக வேண்டும்..

ஐந்து கடமையை பேணுவோராய்..

நாங்கள் வாழவேண்டும்...

முப்பொழும் உன் நினைவில்..

எங்கள் வாழ்க்கை வேண்டும்..

நூர் முஹம்மதின்..
 
அழகை காணவேண்டும்..

அந்த ஆனந்தம் தழைத்து..
 
 நிலைக்கவேண்டும்..

மறுமை வெற்றியாளர்களாய்..

உன்னை சந்திக்கவேண்டும்...

உன்னை சந்தித்த மகிழ்ச்சி விளிம்பில்..

நாங்கள் மிளிரவேண்டும்...

இம்மையிலும் மறுமையிலும்..

உன் -அடிமையாகவே நாங்கள்...

உன் புகழை போற்றவேண்டும்..