அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

27 February 2012

யா அல்லாஹ்..! எங்கள் இறைவா..!!

யா அல்லாஹ்..!
ஐந்து கடமை நிறைத்து..
வாழ உன் உதவி...!

எங்களால் பிறர்க்கு..
... பாதிப்பு ஏற்படாமலும்..

பிறரால் எங்களுக்கு..
பாதிப்பு ஏற்படாமலும்..
என்றென்றும் உன் துணை..!

எங்கள் நம்பிக்கைகள்..
தடம்புரழாமல் இருக்க..
உன் கருணை..!

வாழ்வதற்காண வழி...
முஹம்மத் நபி (ஸல்) வழியை..
எங்கள் வாழ்க்கையாக்கு..!

எங்கள் மண்ணறையை..
விசாலமாக்கு...

நரகத்தின் பிடியிலிருந்து..
எங்களை காப்பாற்று..!

மறுமை வாழ்க்கையை..
நீ விரும்பியதை போன்று..
எங்களுக்கு வழங்கு..!

உன் புகழ் ஒன்றே..!
உலகில் போற்றி போற்றி..!!

13 February 2012

யா அல்லாஹ்..!

யா அல்லாஹ்..!
பிறந்துவிட்டவரும்..
மரணித்தவரும்..

பிறக்கபோவோரும்..
... மரணிக்கபோவோரும்..

நீ விதித்தவைகளில்..
உள்ளவர்களே...!

நிலைத்தவனும்..
தீர்ப்பு நாளின்.
அதிபதியும் நீ ஒருவனே..!

மன்னிப்பதற்கும்..
தண்டிப்பதற்கும்...
நீயே உரிமையாளன்...!

முஹம்மத் நபி தந்த மார்க்கத்தை...
நீயே முழுமையாக்கியவன்....

ஓர் இறைவா..!
இணைவைத்து வாழ்பவர்கள்..
உன் கோபத்துக்கு ஆளானவர்களே..

நாங்கள் பாவத்தை தவிர...
வேறெதுவும் செய்யவில்லை...

நல்ல மூமீன்களாய்..
முழுமை பெறச்செய்வாய்..!

உனையின்றி வேறொரு..
பாதுகாவலன் இல்லை...

06 February 2012

கணவனுக்கு ஓர் கடிதம்...

அரபுதேசத்திற்கு...
சென்ற என் கணவா..!

வழியில் விழிவைத்து...
காத்திருந்தேன் கணவா..!
...
நீ வந்துவிடவா...
நான் வந்துவிடவா..!
பிரிந்து வாழ்வதற்காகவா...
மணமுடித்தோம்...?

பிரியமுடம் பேசி...
பிரிந்தே வாழ்கிறோம்..!
விரைந்துவா... விரைந்துவா.....

நம் தேசம் நம் இருவரையும்...
வாழவைக்காமலா போய்விடும்....?

இணைந்தே வாழ்வோம்..
காய்கறிகள் விற்றாவது...
காலம் கழிப்போம்...

எனக்காக எல்லாம் இழந்து..
வாழ்ந்தது போதும்...
என்னோடு வாழவா....

எந்நாளும் என்னோடு...
இருந்திடவா கணவா..!
கணவா எனை காணவா..!