அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

30 November 2010

ஓர் இறையே ! நம் இறைவன் !...

ஓர் இறையே ! நம் இறைவன் !..
ஒப்பற்றவனே நம் இறைவன் !..
ஓர் இறை கொள்கையே..
நம் மார்க்கம்..
ஓர் இறை தூதர்  முஹம்மத் நபியே..
நம் இறுதி தூதர்..
ஓர் இறை வழங்கிய-அல்குர்ஆன்னே..
நம் வேதம்..
ஓர் இறைவன் விதித்த..
ஐந்து கடமையே!..
நம் வாழ்க்கை பாதை..
ஓர் இறைவனையே..
நாம் வணங்குவோம்..
ஓர் இறைவனையே..
புகழ் உரைப்போம்..
ஓர் இறைவனிடமே..
நாம் பாதுகாவல் தேடுவோம்..
ஓர் இறையே ! நம் இறைவன்..!

28 November 2010

வாழ்க்கை எப்போது ?- அழகு ?

மறையறிந்தால் -அழகு..
நபி வழி நடந்தால் -அழகு..
தொழுதால் -அழகு..
பொறுமை சுமந்தால்-அழகு..
அடக்கம் ஒழுக்கம் -அணிந்தால்-அழகு..
அன்பை பெற்றால்-அழகு..
அறிவை வளர்த்தால்-அழகு..
தர்மம் கொடுத்தால்-அழகு..
கடமை நிறைத்தால்-அழகு..
இஸ்லாம் கற்றால்-அழகு..
இஸ்லாத்தை கற்பித்தால்-அழகு..
ஓர் இறை நம்பிக்கையோடு வாழ்ந்தால்..
வாழ்க்கை எப்போதும்-அழகு...



              

27 November 2010

நீதியை பற்றி...

நீதியை செலுத்து..
நீதியை காத்து கொள்..
நீதியை நிலைநாட்டு..
நீதி கிடைத்திட போராடு..
நீதிக்கு கூட சாட்சி தேவை..
நீதி வெல்ல துணை இரு..
நீதியின் பக்கம் வெற்றி நிச்சயம்..
நீதியின் குரலாய் ஒலித்திடு..
நீதியை தேடிச்செல்..
நீதிக்காக பொறுமை காத்திடு..
நீதியை நாடு..
நீதி உனக்கு உரியது..
நீதிதான்   உனது  கவசம்..
நீதியை தொலைத்தவன்..
நிம்மதியை இழந்தவன்..
நீதி மனிதன் ஏற்க வேண்டிய..
மதிக்க வேண்டிய..
சுமக்க வேண்டிய ஒன்று....

26 November 2010

அன்புள்ள சகோதரர்களுக்கு....

அன்புள்ள சகோதரர்களுக்கு....
சாந்தியும் சமாதானமும்..
நிலைத்து நிலவட்டுமாக...

உங்கள் நம்பிக்கையை..
புதுப்பித்துகொண்டே இருங்கள்...

உங்கள் முயற்ச்சியை விரிவாக்குங்கள்..
உங்கள் சிந்தனையை செதுக்கி..
கொண்டே இருங்கள்...

உங்கள் போராட்டம் வெற்றியை..
அடைந்த பின்னும்..
உங்கள் போராட்டம் தொடரட்டும்..

25 November 2010

இளைஞர்களே!

இளைஞர்களே!
உங்கள் குடும்பமும் ....
உங்கள் தேசமும் ...
உங்கள் இரு கண்கள் ..
நீங்கள்  விடியும் முன்னே ..
விழித்திடுங்கள் ...

நேரம் விரைய்யமாக்காமல் ....
உழைத்திடுங்கள் ...
கர்வம் கொள்ளாமல் .
வாழ்ந்திடுங்கள்..

கடமையை ஏற்று...
கண்ணியம் காத்திடுங்கள்...
 
உங்கள் ஒவ்வொரு வெற்றியும்..
போராட்டத்தில் தொடங்குகிறது..

நிலவின் வெளிச்சம் உலகுக்கு..
ஒரு தந்தையின் உழைப்பு..
தன் குடும்பத்துக்கு..

ஓர் இறைவனின் படைப்பு..
மனிதனுக்கு...
ஒரு வீரனின் வெற்றி தன் நாட்டுக்கு ..

ஒரு தேடலில் கிடைத்த வெற்றி ...
தேடலில் தொடரட்டும் ...
உங்கள் வாழ்க்கை பயணம் ....

இது எக்காலம் ?

எழுத்து ஆசனம் சிறுக சிறுக..
அழியும் காலம்...

கணிப்பொறியின் வளர்ச்சியில்..
வாழும் காலம்..

அரைநிர்வாண விபச்சாரம்..
நாகரிகமாக மாறிவரும் காலம்...

நகை மோகமும் வட்டி வளமும்..
வதைக்கும் காலம்...

ஏழை ஏழையாகவே பசியில் வாடும்..
கொடுரக்காலம்...

கடமை தவறிய ஆட்சித்துறை..
காவல்துறை அதிகாரத்துரை..
நீதித்துறை சீர்கேடுகள்..
தலைவிரித்தாடும் இழிவு இழுக்கு..
அழிவுக்காலம்...

இயந்திர மனிதனாய்..
இன்றளவும் வாழும்..
இறுதிக் காலம்...

மனிதாபிமானம் தொலைத்த..
ஐந்தறிவு    ஐய்யகாலம்..

குப்பை தொட்டி  குழந்தை..
பெருகிவரும்..
இது இக்காலம்...

22 November 2010

சிந்திக்க மட்டும்....

நிலுவை மோசடியில் கூட்டுறவுகள்..
வட்டியின் வளர்ச்சியில் செல்வந்தர்கள்..
அனைத்து துறைகளும்  ஊழல்கள்..
லஞ்சத்தில் -அரசு துறைகள்..
ரவுடிகளை பணியமர்த்திய்ய வங்கிகள்...
வாக்குருதிகளை வாரியிறைக்கும் கட்சிகள்...
தூர்வார்படாத குளங்கள்...
ஆற்று மணலில் அரசியல் நாடகங்கள்..
ஒரு நாள் முழுவதும் கையேந்தி பிச்சை..
எடுத்தும் ஒரு வேலை சோற்றுக்கு ..
சேராத பணம் .....
நாகரியத்தை உடுத்திய மனிதன்..
ஒழுக்கத்தை இழந்தான்...
வட்டியை பெருக்க நினைத்தவன்..
தர்மத்தை மறந்தான்.....
சமுதாய மக்களுக்காக எழுதப்பட்டவை..
சிந்திக்க மட்டும்....

21 November 2010

ஹைக்கூவில் ஒரு கலவை

கல்லெறிந்து போராடி பழகிவிட்ட
பாலஷ்தினர்கள்....

அவ்வப்பொழுது போர்தொடுப்பதும்
குண்டு மழை பொழிவதும்
பொழுது போக்காகி விட்ட
இஸ்ரேலிய யூதர்கள் ...

இதயம் இல்லாதவர்களை ..
அதிபராய் தேர்ந்தெடுக்கும் ..
அமெரிக்க மக்கள் ...

என் நாட்டு அரசியல்வாதிகள்
ஓட்டு பொருக்கிகலாய்
ஆகிவிட்ட விளைவு
எங்கள் சமூகம் இருட்டில் -அல்ல ..
இருட்டாகவே இருக்கிறது ...

வெளிநாட்டு மோகத்தில்
படிப்பை தொலைத்த
என் சமூக இளைஞ்ர்கள்

கனவிலும் நினைவிலும்
தொலைபேசியிலும்  வலையிலும்
வாழ்க்கை  தொலைக்கிற
என் சமூக மக்கள் ...

தொலைக்காட்சி தொடரில்
நேரத்தை தொலைக்கிற
என் சமூக பெண்கள் ...

இளைஞர்களே!
வரதட்சனை ஒழியும் வரை
வட்டி - அழியும் வரை
தர்மம்  தழைக்கும் வரை
ஏகத்துவம்  எழுச்சிபெரும்வரை
இஸ்லாம் உறவுகளே !
ஒன்று கூடுவோம் மறுமை
வெற்றி பெறுவோம் !!!..
 

 

20 November 2010

அல்லாஹ் இருக்கிறான்

அல்லாஹ்    இருக்கிறான்  ! 
ஓர்  இறைவனாக இருக்கிறான் !
இஸ்லாத்தை தோற்றுவித்தவனாக
இருக்கிறான் !
முஹமத் நபியை துதராக
நியமித்தவனாக இருக்கிறான் !
இறைமறையை  அருளியவனாக
இருக்கிறான் !
புகழுக்கு உரியவனாக இருக்கிறான் !
இம்மையிலும்  மறுமையிலும்
ஆட்சியாளனாக இருக்கிறான் !
நன்மையும் தீமையும்
பிரித்தவனாக இருக்கிறான் !
சொர்க்கமும் நரகமும் அமைத்தவனாக
அல்லாஹ் இருக்கிறான் !!!