அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

27 November 2011

எந்த படுபாவி கண்டு புடிச்சான்....

அடி வெட்கத்தில் விளைஞ்சவளே...
வேதனைக்கு சமஞ்சவளே...

வரதட்சணை கொடுத்து...
மணவாழ்க்கை வாங்கணுமா..?..!
வேணாண்டி வேணாண்டி...

ஒன்னுமில்லாதா உங்கப்பன்...
ஊருகெல்லாம் நாட்டாம...

குத்த வைச்சி சோகம்...
கொண்டு வந்து நின்றவளே...

எந்த படுபாவி கண்டு புடிச்ச...
வரதட்சணை கொடூம..

நாத்து கூட- அடுத்த வயலுக்கு...
வாக்கப்பட்டு போகுது...

நான்  பெத்த மக முப்பத தாண்டி...
நிற்கராளே...

பெத்த வயறு பத்த..
எந்த படுபாவி கண்டு புடிச்ச..
வரதட்சணை கொடூம...

சக்காளத்தியா வாக்கப்பட...
ஊருக்கு ஒருத்தன்...
இல்லாமலா போவான்.....

21 November 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்..!

ஓர் இறைவனை மட்டும்..
வணங்கச்சொன்ன...
இறைத்தூதர்...

சிறுபடையாய் இருந்தும்..
படைத்தோனின் துணை கொண்டு..
பெரும்படைகளை..
வீழ்த்திய  சரித்திரம்...


வலிமை கொண்ட..
ஆட்சி அதிபதியாய் இருந்தும்..
எளிமையாய்  வாழ்ந்த சரித்திரம்..

மறப்போருக்கும்..
மறைப்போருக்கும்..
மறுப்போருக்கும்..
மறுமையை எச்சரிப்பவராய்...
இருந்தார்...

மன்னிப்பதாயினும்..
தண்டிப்பதாயினும்..
ஓர் இறைவன் விதித்த...
சட்டத்தையே பின்பற்றலானார்...

திருடுபவரின் கையை..
வெட்டுங்கள் என்றார்...

என் மகள் பாத்திமாவே திருடினாலும்..
கையை வெட்டுவேன் என்ற...
நீதி பற்றாலர்....

நிலுவை மோசடி..
பெரும் குற்றம் என்றார்...

சிலை வணங்கிய கூட்டத்தாரிடம்..
மனிதனுக்கேற்ற மார்க்கத்தை..
மனம் நிறைக்க செய்தார்...

இறுதி நபியாய்..
உறுதி நபியாய்..
உத்தம நபியாய்..
உலகில் உதித்த..
உயர்ந்தோனின் தூதராவார்..
அழகிய முன் மாதிரி முஹம்மத்...

11 November 2011

அர்த்தமுள்ள கிறுக்கல்கள்....

எச்சரிக்கை செய்த..
ஓர் இறைவேதம்....

பயனற்று போன...
கடந்த காலங்கள்..

நன்மையும் தீமையும்...
நம் வாழ்க்கை பாதையின்...
சோதனைச்சாவடி....

மறுமை வாழ்க்கையில்..
நம்பிக்கை வைத்தவர்கள்...
அதற்காக வாழமறந்தார்கள்...

விளைகிற ஆசையில்...
நன்மைகள் எதுவுமில்லை...

நல்லோர்கள் பலசெயல்களை...
அனுபவிக்காமல் துறந்தே..
வாழ்ந்தார்கள்....

விதியில் மட்டும் சதி இல்லை...
அவன் விதித்ததே நடக்கும்..

இம்மை நிறைய்ய...
கற்று தந்திருக்கிறது...
வாழத்தான் முடியவில்லை...

ஆறறிவில் அறியமுடியவில்லை..
படைத்தவனின் அற்புத அதிசிய...
ஆச்சரியங்களை...

தெரிந்தோ தெரியாமலோ...
எண்ணங்களை மட்டும்...
அழகாய் வைத்திருப்போம்...

04 November 2011

( நீடூர்) நெய்வாசல் நாட்டாமை தேர்தல் கோரிக்கை..

 நீடூர்- நெய்வாசல் ஜமாத்தார்களுக்கு  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அல்லாஹ்வின் நாட்டத்தால் நாட்டாமை தேர்ந்தெடுக்கும் புதிய தலைமை..
எப்படி தேர்ந்தெடுக்கவேண்டும் இதுவரை எப்படி தேர்ந்தெடுத்தார்கள்..
இனி மேலும் குரல் வாக்கெடுப்பில் தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக..
நேர்மையாக ஜனநாயக முறைப்படி இருக்காது   ஆகவே...
ஓட்டெடுப்பு மூலமே  தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்திட வேண்டும்...
அப்போதுதான் தனிமனித உரிமையை நிலை நாட்டுவதாக இருக்கும்...
எந்த ஒரு  தனிமனித ஆதிக்கமும்  நமதூரில்இனிமேல் இருக்க கூடாது..
ஊர் கட்டுப்பாடு என்பது -அடுக்கு முறையில் இருக்க கூடாது..
அதிகார பகிர்வு மூலமே தீர்வு காணமுடியும் இதற்கு ஓட்டெடுப்பு தேர்வே...
அனைவரையும் ஒன்றுபடுத்தி ஒற்றுமை நிலைத்து தழைத்து விளங்கும்....
ஓட்டெடுப்பில் எந்த தில்லு முல்லும் நடைபெறாமல் நேர்மையாய் நடக்க..
அல்லாஹ்வை சாட்சியாய் வைத்து நடைபெறவேண்டும்...
யார் ? தெர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஒரு கோரிக்கை...
ஊர் வரவு செலவு  மதரஸா வரவு செலவு  வெளிபடையாக இருக்கவேண்டும்.
அதற்கு கணினியில் பதிவிட்டு இணையதளத்தில் வெளியிடவேண்டும்...
அப்போதுதான்  பதவி நம் மீது கரைபடிந்த பழியை சுமத்தாது..
பொதுவாழ்வில் தூய்மையானவர்களாக இருந்தால் பதவி சுமையா...
இருக்காது எனவே ஓட்டெடுப்பு மூலம்  தேர்ந்தெடுப்போம்..
அமைதியும் ஒற்றுமையும் நாமாக இருந்து அடுத்த ஊருக்கு..
எடுத்துகாட்டாக வரலாராய் இருப்போம்  இன்ஷா -அல்லாஹ்....!

                                                                                             வஸ்ஸலாம்..
                                                                    நீடூர் நெய்வாசல்  அ பாபு....