அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

29 August 2011

இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

----------------ஈத் முபாரக்---------------------

என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்...
ஆரத்தழுவி கொண்டாடுவோம்....

அன்பில் விளிம்பில் நனைவோம்....
முகம் மலர்ந்த பூரிப்பில்..
கடமை நிறைத்த மகிழ்வில்...
கண்ணியம் காத்த சமுதாயமாய்..
கட்டுபாடு ஒற்றுமை காப்போம்...

ஆயிரம் மாதங்கள் வென்ற....
லைலத்துல் கத்ர்..
ஒர்யிரவு   சிறப்பு...

புத்தாடையில் புதிய மனிதனாய்..
நன்மைகளை வாழ்வில் சேர்ப்போம்..

அல்லாஹ்விற்குரிய நோன்பை..
பசித்திருந்தளித்தோம்..

முஹம்மத் நபிவழி கனவு..
நிஜத்தினில்  வாழ்ந்தோம்...

பசித்திருந்தோம்..
விழித்திருந்தோம்...
ஏழ்மையறிந்தோம்..
தர்மம் அளந்தோம்..
ஓர் இறைவனையே மகிழ்வித்தோம்..

கொண்டாடி மகிழ்வோம்...
என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்..
-----------ஈத் முபாரக்----------------....

24 August 2011

விரைந்தெழு தோழா விரைந்திடு தோழா..!

விரைந்தெழு  தோழா..!
விரைந்திடு தோழா.!

நாளைய உலகை இன்றே..
எதிர்கொள் தோழா..

உறுதியான உள்ளம் வைத்து..
உயர்வான பாதை அமைத்து..

உழைத்து வாழ புறப்படு தோழா..!
ஒன்று பட்டால் வருமை..
ஒழித்து விடலாம்..

தொன்று தொட்டு பகையை..
வென்றுவிடலாம்..

எழுச்சி எங்கும் ஏற்றிவைப்போம்..
தோழா பாரதி கண்ட புதிய பாரதம்..
விரிப்போம் தோழா..

நம் தேசம் சுத்தம் செய்வோம்..
நாளை நமதே இன்றே உழைப்போம்..

ஊழல் லஞ்சம் பஞ்சம் இல்லாத..
நாடாய் மாற்ற...

வருமையில்லாத நாடாய் செழிக்க..
உயர்ந்த நாடாய் உலகில் செழிக்க..

உறக்கம் கலைப்போம்..
உழைத்து வாழ்வோம்..
உயர்வை தொடுவோம்..

விரைந்தெழு தோழா..
விரைந்திடு   தோழா...

10 August 2011

சிந்திக்கவேண்டிய சமுதாயம்..

எங்கே ? போகிறது..
நம் சமூகம்..
எங்கே ? போகிறது..

தர்கா வழிபாடு..
இன்னும் நடக்கிறது..

மனித புகழ்பாடு..
இன்னும் நடக்கிறது..

இணைவைக்கும் செயல்பாடு..
இஸ்லாத்தில் இருந்தும்..
தொடர்கிறது..

இரவும் விழிக்கிறது..
நம் சமூகம் விழிக்க..
மறுக்கிறது...

தடுக்கப்பட்ட வட்டியை..
வாங்கியும் கொடுத்தும்..
வாழ்கிறது..

இனிக்கும் இஸ்லாம்..
கசக்கும் சமூகமாய்..
இருக்கிறது..

தடுக்கவேண்டும்..
தவிர்க்கவேண்டும்..
விழிப்புணர்வு..
விளையவேண்டும்...

அறியாமை களையவேண்டும்..
அறிந்த சமூகமாய்..
நம் சமூகம் மலரவேண்டும்...

மார்க்க கல்வியும் உலக கல்வியும்..
வாழ்க்கையாக்கி கொள்ளவேண்டும்..

மறுமை வெற்றி..
 நமதாக்கி கொள்ளவேண்டும்...