அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

03 April 2011

எந்தாயி நீ் என்ன செய்வ..

 அடி பெத்தவள..
பெயர் தாங்கியா வளர்த்தவள..
மார்க்கம் தெரியாம வளர்த்தாயடி...

அல்லாஹ்தான் இறைவன் என்று தெரியும்..
ஐய்வேல தொழுகைக்கு போகம..
நான் தொலைச்ச காலத்த யாரடி கொடுப்பா...

நபிவழி நடக்காம நண்பர்களோட..
நான் கழிச்ச நேரத்த நான் எப்படி சொல்ல..

இணையில்லா இறைவனுகிட்ட கேக்காம...
தர்காவுக்கு கூட்டிக்கிட்டு போய்யி...
பாவாகிட்ட கையேந்தி கேக்க வைச்சி...
அல்லாஹ்வுடைய கோபத்துக்கு..
ஆளாக்க வைச்சயடி....

சந்தன கூடுக்கு கூட்டிக்கிட்டு போய்யி..
தேர்யிழுக்க வைச்சயடி..

தொழுகைக்கு என்ன ஓதனுன்னு..
தெரியாம செய்கை தொழுகை..
தொழுது வந்தேன்னடி....

ஐந்து கடமை தெரியாம...
மா நபி வழி நடக்காம..
நேர்வழி தெரியாம..
எல்லா வழியிலும் நடந்தேன்னடி....

மறுமை வாழ்க்கை உண்டுன்னு சொல்றாங்க..
சொர்க்க வாழ்க்கை உண்டுன்னு சொல்றாங்க..
நரகவாழ்க்கையும் உண்டுன்னு சொல்றாங்க..
நம் பாவம் மன்னிக்க படைச்சவனயே கேப்போமடி..

உந்தாயி சொல்லி கொடுக்காம..
எந்தாயி நீ என்ன செய்வ...

1 comment: