அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

05 December 2011

ஓர் இறைவா...! நீயும்- நானும்....

யா அல்லாஹ்..!
என் இறைவன் - நீ..
உன் -அடிமை - நான்..

படைத்தவன்- நீ..
உன்னால் படைக்கப்பட்டவன்- நான்..

புகழுக்குரியவன்- நீ..
புகழுரைப்பவன் - நான்...

கொடுப்பவன் - நீ..
பெறுபவன் - நான்..

எல்லாம்-அறிந்தவன் - நீ...
எல்லாம்-அறியாதவன் - நான்...

பலமானவன் - நீ..
பலஹீணமானவன் - நான்...

நிலையானவன் - நீ...
நிலையற்றவன் - நான்...

மறக்காதவன் - நீ...
மறப்பவன் - நான்..

மன்னிக்க கூடியவன் - நீ..
மன்னிப்பு கேக்க கூடியவன் - நான்...

தூய்மையானவன் - நீ...
தூய்மை பெறாதவன் - நான்..

இணை துணை இல்லாதவன் - நீ..
இணை துணையோடு வாழ்பவன் - நான்...

என் இறைவன் - நீ..
உன் -அடிமை - நான்....

No comments:

Post a Comment