அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

06 August 2012

அழகிய முன் மாதிரி முஹம்மத் (ஸல்)ஏக இறைவனின் தூதர் என்றார்..

ஆடு மேய்த்த தொழிலாளியாகவே வாழ்ந்தார்..

...
படைப்புகளை வணங்க இயலாதன்றார்...

படைத்தவனை வணங்கியும்..

வணங்கவும் சொன்னார்..

மனிதர்கள் கற்பனைக்க முடியாத..

வேதத்தை தந்தார்...

ஏக இறைவனின் வார்த்தை என்றார்...

வட்டி வாங்குவதும் கொடுப்பதும்..

சாட்சியாய் இருப்பதும் கூடாதன்றார்...

வட்டியில்லாத நிதியத்தை நிறுவினார்...

ஏற்றத்தாழ்வு கற்பிப்பது கூடாதன்றார்...

சகோதரத்துவ மார்க்கத்தை சமர்பித்தார்..

விதவை வாழ்க்கை கூடாதன்றார்...

விதவைகளை மணமுடித்து..

மறுவாழ்வு சமுதாயத்தை மலரச்செய்தார்....

மொழி வெறி கூடாதன்றார்...

பிறமொழிகளுக்காக அரபிமொழிக்கு...

எந்த சிறப்பும் இல்லை என்றார்...

ஏக இறையோனை ஏற்காத சமுதாயத்தை..

பார்த்து கவலை கொண்டார்..

பண்பட்டு வாழ்வதற்கு...

பண்பாளராய் விளங்கினார்...

அழகிய முன் மாதிரி முஹம்மத் (ஸல்)

No comments:

Post a Comment