அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

30 March 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-10.

இறைவனின் தூதர்..
உலக மனிதகுலத்திற்கு..
நியமிக்கப்பட்ட இறுதி தூதர்..
மனிதயினத்தின் போதகர்..

ஒன்றே குலம் ஒருவனே இறைவன்..
என்று ஒரே மார்க்கத்தை சொல்லி..
மகிழ்ச்சியில் ஆழ்தினார்...

மதங்கள் இல்லை..
ஜாதிகள் இல்லை..
நிறவெறி இல்லை..
மொழிவெறி இல்லை...
என்று ஒரே தாய் தந்தையரின்..
வழி தோன்றலே என்று..
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று..
பிரித்து பார்ப்பதை ஒழித்தார்...

நேர்வழியை நிலை நாட்டினார்..
 நன்மை செய்ய ஏவினார்..

அறிந்தவரும் அறியாதவரும்..
சமமாக மாட்டார்கள் என்று..
தெரிந்து தெளிந்து வாழ..
அறியாமை திரையை விலக்கியவர்...

இஸ்லாம் படைத்தவனின் மார்க்கம்..
அறிந்தோருக்கு நேர் வழி இருக்கிறது..
என்று படைத்தவன்  மீது சத்தியமிட்டு..
சாட்சியளித்தார்...

போர் செய்ய ஆணையிட்டு...
ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து..
கொண்டுயிருக்கிற தலைவரல்ல..

போர் களத்தில்..
தலைமை தாங்கிய தலைவர்..
அழகிய முன் மாதிரி முஹம்மத்..


1 comment:

  1. நபிகள் நாயகம் அவர்களின் அழகிய
    குணங்களை ஒவ்வொன்றாக
    விளக்கும் கவிதை! அருமை!

    ReplyDelete