அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

14 May 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-11.

வாழ்வளித்த வல்லரஹ்மான்..
ஒருவனையே வணங்கச்சொன்ன தூதர்..

மறுமை வெற்றிக்காண பாதையை..
திறந்தளித்த தூதர்...

ஏக இறைவன் ஏற்று போதிக்கச்சொன்ன..
ஏகத்துவத்தை ஏற்றளித்த தூதர்..

இறைமறையின் இலக்கியத்தை..
இலக்கணத்தை இனிக்க சுவைக்க..
வாழ்விருந்தளித்த தூதர்..

இன இழிவு தரும் கோத்திரங்களை..
இனங்கண்டு அழிக்கும் சகோதரத்துவத்தை..
வலியுறுத்திய தூதர்....

மனிதர்களுக்கு மனிதர்கள்..
மண்டியிட்டு கிடப்பதை..
மனயேற்கலாகாது கூடாது...
என்றதூதர்..

பகுத்தறிவு பாசறையாய்..
பண்பட்ட பயன்பட்ட..
ஆறறிவு அறிவுச்சுவையாய்..
அகத்தினுல் அலங்கரித்தார்...

எல்லாம் படைத்தருளிய..
ஏக இறைவனையே வணங்குமாறு..
உளம் நிறைக்க ஏவினார்..
அழகிய முன் மாதிரி முஹம்மத்....

No comments:

Post a Comment