அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

22 May 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-12.படைத்தவனை மட்டும்..
வணங்கச்சொன்ன பண்பு..

ஒழுக்கத்தின் திறவுகோளாய்..
இருக்கும் மரபு...

ஒப்பற்றவனுக்கே அனைத்து புகழும்..
என்று சொன்ன  அழகு....

நான் ஓர் இறைவனின் தூதறென்று..
கர்வம் கொள்ளாத வரலாறு...

வட்டியில் இயங்கும் இயக்கும்..
மனித உலகத்தில் வட்டி கூடவே..
கூடாதன்று சொன்ன சிறந்த பொருளாதாரம்...

சோதனை வாழ்க்கை வென்று..
சொர்க்கம் சென்று குதூகலமாய்..
நிரந்திரவாழ்க்கை தொடங்கு..
என்ற உண்மை நிறை...

ஏக இறைவனிடம் மீளுதல் இருக்கிறதென்று..
ஓர் இறைவனை வணங்குதலும்..
தர்மம் அளித்தலும் நோன்பு வைத்தலும்..
ஹஜ் செய்தலும் மறுமை வெற்றிக்காண..
பாதை திறந்த செல்வம்...

ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும்..
சிறந்த தூதர்களை அனுப்பினோம்..
அகிலத்தார்களின் அதிபதி..
சொன்ன நற்செய்தியை...
அன்புள்ளம் கொண்டோர்களிடம்..
பதிவுசெய்த பங்களிப்பு...

வாழும் சமுதாயதினருக்கு வழி காட்டி..
வல்ல இறைவனின் மார்க்கத்தை..
மனதில் கொடுத்து சென்ற அன்பளிப்பு....

எந்த தருணத்திலும் நீதியை..
செலுத்த சொன்ன நெறி...

தீமைகளை புறக்கணித்து..
நல்லவைகளை அற்பணிக்கச்சொன்ன..
பகுத்தறிவு விடியல்...

சமத்துவத்தை சகோதரத்துவத்தை..
அல்லாஹ்வின் அரசாலும் மகத்துவத்தை..
அமைதியில் தழைக்கச்செய்த..
அழகிய முன் மாதிரி முஹம்மத்....

No comments:

Post a Comment