அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

24 August 2011

விரைந்தெழு தோழா விரைந்திடு தோழா..!

விரைந்தெழு  தோழா..!
விரைந்திடு தோழா.!

நாளைய உலகை இன்றே..
எதிர்கொள் தோழா..

உறுதியான உள்ளம் வைத்து..
உயர்வான பாதை அமைத்து..

உழைத்து வாழ புறப்படு தோழா..!
ஒன்று பட்டால் வருமை..
ஒழித்து விடலாம்..

தொன்று தொட்டு பகையை..
வென்றுவிடலாம்..

எழுச்சி எங்கும் ஏற்றிவைப்போம்..
தோழா பாரதி கண்ட புதிய பாரதம்..
விரிப்போம் தோழா..

நம் தேசம் சுத்தம் செய்வோம்..
நாளை நமதே இன்றே உழைப்போம்..

ஊழல் லஞ்சம் பஞ்சம் இல்லாத..
நாடாய் மாற்ற...

வருமையில்லாத நாடாய் செழிக்க..
உயர்ந்த நாடாய் உலகில் செழிக்க..

உறக்கம் கலைப்போம்..
உழைத்து வாழ்வோம்..
உயர்வை தொடுவோம்..

விரைந்தெழு தோழா..
விரைந்திடு   தோழா...

No comments:

Post a Comment