அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

29 August 2011

இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

----------------ஈத் முபாரக்---------------------

என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்...
ஆரத்தழுவி கொண்டாடுவோம்....

அன்பில் விளிம்பில் நனைவோம்....
முகம் மலர்ந்த பூரிப்பில்..
கடமை நிறைத்த மகிழ்வில்...
கண்ணியம் காத்த சமுதாயமாய்..
கட்டுபாடு ஒற்றுமை காப்போம்...

ஆயிரம் மாதங்கள் வென்ற....
லைலத்துல் கத்ர்..
ஒர்யிரவு   சிறப்பு...

புத்தாடையில் புதிய மனிதனாய்..
நன்மைகளை வாழ்வில் சேர்ப்போம்..

அல்லாஹ்விற்குரிய நோன்பை..
பசித்திருந்தளித்தோம்..

முஹம்மத் நபிவழி கனவு..
நிஜத்தினில்  வாழ்ந்தோம்...

பசித்திருந்தோம்..
விழித்திருந்தோம்...
ஏழ்மையறிந்தோம்..
தர்மம் அளந்தோம்..
ஓர் இறைவனையே மகிழ்வித்தோம்..

கொண்டாடி மகிழ்வோம்...
என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்..
-----------ஈத் முபாரக்----------------....

No comments:

Post a Comment