அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

27 November 2011

எந்த படுபாவி கண்டு புடிச்சான்....

அடி வெட்கத்தில் விளைஞ்சவளே...
வேதனைக்கு சமஞ்சவளே...

வரதட்சணை கொடுத்து...
மணவாழ்க்கை வாங்கணுமா..?..!
வேணாண்டி வேணாண்டி...

ஒன்னுமில்லாதா உங்கப்பன்...
ஊருகெல்லாம் நாட்டாம...

குத்த வைச்சி சோகம்...
கொண்டு வந்து நின்றவளே...

எந்த படுபாவி கண்டு புடிச்ச...
வரதட்சணை கொடூம..

நாத்து கூட- அடுத்த வயலுக்கு...
வாக்கப்பட்டு போகுது...

நான்  பெத்த மக முப்பத தாண்டி...
நிற்கராளே...

பெத்த வயறு பத்த..
எந்த படுபாவி கண்டு புடிச்ச..
வரதட்சணை கொடூம...

சக்காளத்தியா வாக்கப்பட...
ஊருக்கு ஒருத்தன்...
இல்லாமலா போவான்.....

No comments:

Post a Comment