அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

29 January 2012

அல்லாஹ்வுக்கு நாங்கள் -அடிமை..!

அன்புள்ள அதிகாரமுள்ள அல்லாஹ்வுக்கு...!
உன் அடிமை உள்ளத்தால் எழுதுவது......

அளவற்ற அருளாலன்...
நிகரற்ற அன்புடையோனும் ஆவாய்..!
...
எங்கள் பாவங்கள் மன்னிக்க...
உன்னையே இறைஞ்சுகிறோம்....

சாந்தியும் சமாதானமும் எல்லோர் மீதும்..
நிலவ உன் உதவியை நாடுகிறோம்...

உன் கருணையால் நாங்கள் நலம்..!
உன் அருளினால் வலங்கள் பெற்றோம்..!

உன் ஒருவனுக்கே புகழ் சேர்ப்போம்..!
உன்னிடமே மீளுவோம்..!

கேடுகெட்ட ஷைத்தானிடமிருந்து..
உன்னிடம் பாதுகாவல் தேடுகிறோம்..

இணைவைக்காமல் வாழவும்...
ஓர் கொள்கையை முழுமையாய் பின்பற்றவும்...
எங்களுக்கு உன் துணைவேண்டும்....

மறுமை என்னும் மகத்துவத்தில்..
நாங்கள் உன்னை காண ஆவல்....

இப்படிக்கு என்றென்றும் உன் -அடிமை..
நீடூர் நெய்வாசல் அ பாபு..

No comments:

Post a Comment