அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

15 April 2012

யா அல்லாஹ்..! எங்கள் இறைவா..!!..2

யா அல்லாஹ்...!

இஸ்லாம்..
ஏற்றோம் நாங்கள்...

இறைமறையை..
படித்தோம் நாங்கள்...
...
முஹம்மத் நபிவழியில்..
 நடக்கவில்லை நாங்கள்..

அலட்சியம் செய்தோம்...
நரகத்தில் இடம் பிடிக்க..

போட்டி போட்டு..
பாவங்கள் குவித்தோம்....

மண்ணறை வாழ்க்கையை...
மறந்தே வாழ்ந்தோம்...

புறம் பேசினோம்..
இட்டு கட்டினோம்...

பொறாமை கொண்டோம்..
கோபம் கொண்டோம்...

பழி தீர்த்தோம்..
கொள்ளையடித்தோம்...

உனக்கு இணையாக..
மனிதர்களை புகழ் பாடினோம்..

வட்டி வாங்கினோம்..
வட்டி கொடுத்தோம்....

வரதட்சணை வாங்கினோம்..
வரதட்சணை கொடுத்தோம்..

இந்த இருவருக்கும்..
சாட்சியாய் இருந்தோம்...

தொழுகாமல் நேரத்தை..
விரைய்யமாக்கினோம்...

வீண்விரைய்யும் செய்தோம் ..
நிலுவை மோசடி செய்தோம்...

ஆடம்பர திருமணம் செய்தோம்..
இசையில் முழ்கினோம்...

ஓர் இறைவா..! தூய இஸ்லாத்தை..
எங்கள் உள்ளத்திலும்....

எங்கள் வாழ்க்கையிலும்..
பூக்கச்செய்வாய்...!!

No comments:

Post a Comment