அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

18 September 2012

எங்கள் முஹம்மத்..

எங்கள் முஹம்மத்..

அழகிய முன் மாதிரி..!

படைத்தவனின் தூதர்..

...
மனிதர்களில் மாணிக்கம்...

படைப்புகளை விடுத்து..

படைத்தவனை வணங்கச்சொன்ன..

பண்பாளர்...!

எழுத படிக்க தெரியாத...

ஏகன் தீட்டிய வைரம்..!

சத்திய மார்க்கத்தை..

சாந்திய வழியில் தந்த..

வாழ்வியல் வசந்தம்..!

கல் சிலை வணங்கி வந்து..

தீண்டாமை தழைத்த..

சமுதாயத்தை சீர்படுத்திய..

சமத்துவ எழுச்சி...

ஒப்பற்ற இறைவனின்..

ஓர் இறை கொள்கையை..

எளிமையில் எடுத்துரைத்த...

எம்பெருமானார்...

மனிதகுல ஒழுக்கத்திற்கு..

மாமருந்து...

பகுத்தறிவு விடியல்..

ஐந்து கடமை தந்து...

பேணி பேணச்சொன்ன..

பத்தரை மாதத்து தங்கம்...

எங்கள் முஹம்மத்..!

அழகிய முன் மாதிரி...

No comments:

Post a Comment