அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

08 December 2012

எங்கள் முஹம்மத்(ஸல்) -அழகிய முன் மாதிரி..!

ஒப்பற்ற இறைவனுக்கு..!
...

ஒளிமையமான இறைவனுக்கு..!

உலகம் நிறைக்க...

புகழ் சேர்த்த உத்தமர்..

தூய்மையான இறைவனுக்கு..!

தூதராய் பணியாற்றிய...

நபித்துவத்தின் நன்மாராயம்..!

படைப்புகளை வணங்கி வந்த..

மனித சமூகத்தில்..

படைத்தவனை வணங்கச்சொன்ன..

இறுதி இறைத்தூதர்...!

சொல்லெறிந்து தூற்றியபோதும்..

கல்லெறிந்து பல் உடைந்தபோதும்..

சத்தியத்தின் பால் -அழைத்த...

சிறந்த போதகர்...!

அல்லாஹ்வின் அடிமை என்று..

அழைக்கச்சொல்லி மகிழ்ந்த..

மாமனிதர்...

நீதியை நிலைனாட்டி..

நீதியை பேணச்சொல்லி...

நீதியாகவே வாழ்ந்த வரலாறு..!

சத்தியமார்க்கத்தின்..

சாதனை பெட்டகம்...

அறிவுடையோருக்கு..

நேர்வழிக்காட்டி..

அச்சமூட்டி எச்சரிக்கை செய்த...

எங்கள் முஹம்மத்(ஸல்)

அழகிய முன் மாதிரி...

No comments:

Post a Comment