அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

31 December 2012

யா அல்லாஹ்..!எல்லோரும் எல்லாமும்..
 
பெற வேண்டும்..

எல்லா புகழும் உனக்கே..
 
உரித்தாக்க வேண்டும்..

அமைதி எங்கும் நிலவ வேண்டும்..

எங்கள் பாவங்களை..
 
நீ மன்னிக்கவேண்டும்..

கேலியும் கிண்டலும் புறம் பேசுதலும்..

எங்களை விட்டு விலக வேண்டும்..

ஐந்து கடமையை பேணுவோராய்..

நாங்கள் வாழவேண்டும்...

முப்பொழும் உன் நினைவில்..

எங்கள் வாழ்க்கை வேண்டும்..

நூர் முஹம்மதின்..
 
அழகை காணவேண்டும்..

அந்த ஆனந்தம் தழைத்து..
 
 நிலைக்கவேண்டும்..

மறுமை வெற்றியாளர்களாய்..

உன்னை சந்திக்கவேண்டும்...

உன்னை சந்தித்த மகிழ்ச்சி விளிம்பில்..

நாங்கள் மிளிரவேண்டும்...

இம்மையிலும் மறுமையிலும்..

உன் -அடிமையாகவே நாங்கள்...

உன் புகழை போற்றவேண்டும்..

No comments:

Post a Comment