அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

28 February 2013

யா அல்லாஹ்..!

யா அல்லாஹ்..!

அளவற்ற அருளாலனும்..!

நிகரற்ற அன்புடயோனும்..!

... உன் நற்பெயரால்..!

தொடங்குகிறேன்..!

எல்லாம் படைத்து..!

எல்லாம் கொடுத்து..!

எங்களுக்கு உயிர் தந்த..

எங்கள் இறைவா..!

எங்கள் உயர்வா..!

எங்கள் நம்பிக்கையை..

எங்கள் உள்ளத்தில்..

பலப்படுத்துவாய்..!

உன்னிடம் மீளும்போது..

நீ விரும்பிய அடியானாக..

எங்களை மீளச்செய்வாய்..!

சொல்லும் செயலும்..

பதியவைப்பதில்..

நீயே சிறந்த நீதிமான்..!

மரணிக்க பிறந்த..

மனிதர்கள்தான் நாங்கள்..

நிலையான உன்னை..

வணங்கி வாழச்செய்வாய்..!

எண்ணமுடியாத அத்தாட்சிகளை..

வழங்கி சிந்திக்கவைத்து..

ஏற்கச்சொல்லி முஹம்மத் நபிவழி.

வாழச்சொல்லிய நீயே.!

எங்கள் இறைவன்..!

வல்லமையும் தூய்மையும்.!!

உன்னக்கே பொருந்தும்.!!!.

No comments:

Post a Comment