அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

06 February 2013

யா அல்லாஹ்..!நீதியும் அநீதியும்..

நீ நன்கறிந்தவன்..

... சத்தியமும் அசத்தியமும்..

நீ பிரித்தறிந்தவன்..!

உன் நீதிமன்றத்தில்..


நீதி மட்டுமே வென்றெடுக்கும்..

சூழ்ச்சிகார்களுக்கெல்லாம்..

நீ சூழ்ச்சிகாரன்..

உன் தீர்ப்பு அளவிடமுடியாதது..

உன் தீர்ப்பை நிராகரிக்கமுடியாது..

அந்நாளில் நீயே நீதியரசன்..!

பதியவைப்பதிலும்..!

சாட்சியாயிருப்பதிலும்...!

நீ பேராற்றல் உடையவன்..!

நீ மன்னிக்ககூடியவன்..!

நீ தண்டனை தாங்கமுடியாதது..!

அறிந்தவர்களில் நீயே சிறந்தவன்..!

நிலைத்தவனும்...

நீதியை காப்பவனும்..!

நீ ஒருவனே..! ஞானத்திலும்..

விஞ்ஞானத்திலும் உன் வல்லமை..

அளவிடமுடியாதது..

மிக பெரியோனும் தூயவனும்..!

எங்கள் இறைவனாகிய..!

நீயே எங்கள் துணை..!

No comments:

Post a Comment