அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

21 November 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்..!

ஓர் இறைவனை மட்டும்..
வணங்கச்சொன்ன...
இறைத்தூதர்...

சிறுபடையாய் இருந்தும்..
படைத்தோனின் துணை கொண்டு..
பெரும்படைகளை..
வீழ்த்திய  சரித்திரம்...


வலிமை கொண்ட..
ஆட்சி அதிபதியாய் இருந்தும்..
எளிமையாய்  வாழ்ந்த சரித்திரம்..

மறப்போருக்கும்..
மறைப்போருக்கும்..
மறுப்போருக்கும்..
மறுமையை எச்சரிப்பவராய்...
இருந்தார்...

மன்னிப்பதாயினும்..
தண்டிப்பதாயினும்..
ஓர் இறைவன் விதித்த...
சட்டத்தையே பின்பற்றலானார்...

திருடுபவரின் கையை..
வெட்டுங்கள் என்றார்...

என் மகள் பாத்திமாவே திருடினாலும்..
கையை வெட்டுவேன் என்ற...
நீதி பற்றாலர்....

நிலுவை மோசடி..
பெரும் குற்றம் என்றார்...

சிலை வணங்கிய கூட்டத்தாரிடம்..
மனிதனுக்கேற்ற மார்க்கத்தை..
மனம் நிறைக்க செய்தார்...

இறுதி நபியாய்..
உறுதி நபியாய்..
உத்தம நபியாய்..
உலகில் உதித்த..
உயர்ந்தோனின் தூதராவார்..
அழகிய முன் மாதிரி முஹம்மத்...

No comments:

Post a Comment