அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

21 November 2010

ஹைக்கூவில் ஒரு கலவை

கல்லெறிந்து போராடி பழகிவிட்ட
பாலஷ்தினர்கள்....

அவ்வப்பொழுது போர்தொடுப்பதும்
குண்டு மழை பொழிவதும்
பொழுது போக்காகி விட்ட
இஸ்ரேலிய யூதர்கள் ...

இதயம் இல்லாதவர்களை ..
அதிபராய் தேர்ந்தெடுக்கும் ..
அமெரிக்க மக்கள் ...

என் நாட்டு அரசியல்வாதிகள்
ஓட்டு பொருக்கிகலாய்
ஆகிவிட்ட விளைவு
எங்கள் சமூகம் இருட்டில் -அல்ல ..
இருட்டாகவே இருக்கிறது ...

வெளிநாட்டு மோகத்தில்
படிப்பை தொலைத்த
என் சமூக இளைஞ்ர்கள்

கனவிலும் நினைவிலும்
தொலைபேசியிலும்  வலையிலும்
வாழ்க்கை  தொலைக்கிற
என் சமூக மக்கள் ...

தொலைக்காட்சி தொடரில்
நேரத்தை தொலைக்கிற
என் சமூக பெண்கள் ...

இளைஞர்களே!
வரதட்சனை ஒழியும் வரை
வட்டி - அழியும் வரை
தர்மம்  தழைக்கும் வரை
ஏகத்துவம்  எழுச்சிபெரும்வரை
இஸ்லாம் உறவுகளே !
ஒன்று கூடுவோம் மறுமை
வெற்றி பெறுவோம் !!!..
 

 

No comments:

Post a Comment