அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

08 March 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-8எந்த தற்பெருமையும்..
ஏற்காத ஏந்தலானார்..

உயரிய புகழை உரியவனுக்கே..
உயர்ந்தவனுக்கே உரித்தாகுக..
என்று உரைத்தலானார்..

ஏக இறையோனின் ஆணைகளை..
மொளனத்தில் கவணத்தில்..
தன்னுல் பதியவைத்தார்...

வாழ்ந்ததில் சிறப்பு..
வாழ்வதில் சிறப்பு...
வாழ்வதற்கு சிறப்பாய்..
வழிகாட்டினார்...

மனிதகுலத்திற்கு இறுதி தூதர்..
இணைவைக்காமல் வாழச்சொன்ன..
இனிய போதகர்..

வல்லோனின் பிரியமான..
வானவர்களிடம் உரையாடிய..
அழகிய நேசகர்....

விஞ்ஞானம் விதையாக..
இருக்காத காலத்தில்..
வானத்தில் உள்ளதை பற்றி..
பூமியில் உள்ளதை பற்றி..
படைப்பை பற்றி..
படைப்புகளின் வளர்ச்சிகளை பற்றி..
மரணத்தை பற்றி மறுமையை பற்றி..
தீர்ப்பு நாளை பற்றி..
சொர்க்கத்தை பற்றி..
நரகத்தை பற்றி..
முன் அறிவிப்பு செய்தார்..
அழகிய முன் மாதிரி முஹம்மத்....

No comments:

Post a Comment