அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

02 March 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-7

அறியாமை காலத்தில்..
அறிவுடையோர் சிலர்..
அதிசியக்க ஆச்சரியக்க..
இலக்கணத்தோடு..
இலக்கியத்தோடு வாசித்து..
வியக்க வைத்தார்..

அரசாங்க மாளிகை பாலைவன...
குடிசையாய் இருந்தது..

அரசாங்க இருப்பில் உள்ளது..
ஏழைகளுக்கே உரியது என்று..
கொடுக்கும் முறையை..
திட்டமிட்டு வரைமுறைபடுத்தினார்...

மாற்று ஆடைஒன்று மட்டுமே..
வைத்திருந்த மாபெரும்...
தலைவர் ஆவார்....

தன்னை தூற்றுவோரை..
ஓர் இறையை போற்றுவோராய்..
 மாற்றினார்..

இணையில்லா ஏக இறையோனை..
ஏற்காமல் ஏற்றும் வணங்காமல்..
மரணித்து விடாதீர்கள் என்று..
அச்சத்தோடு எச்சரித்தார்...

ஆடு மேய்க்கும் கூட்டத்தார்களிடம்..
இஸ்லாம் மார்க்கம் போதித்த மாண்பு..

ஒப்பில்லா ஓர் இறை புகழ் ஓங்க..
ஓரணி தொடங்கினார்...

உலகத்தலைவர்..
சுவனத்தின் தலைமகன்...

பெண்களை அடிமை படுத்தி..
கேவலபடுத்தி ஆபாசபடுத்தி..
வந்த காலத்தில்..
பெண்மையின் தன்மையும்..
தாய்மையின் சிறப்பையும்..
சிந்திக்க சிறப்பித்தார்..

உள்ளத்தால் பிராத்தனை செய்ய..
உயர்ந்தவனை நினைவுகூர்ந்தார்...
அழகிய முன் மாதிரி முஹம்மத்...!!!

No comments:

Post a Comment