அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

18 March 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-9.

அன்போடும் ஆதரவோடும்..
அரவணைத்தார்..

உயர் குலமென்று தங்களைத் தாங்களே..
கருதிய குரைஷியர்கள் இழித்தார்கள்..
பழித்தார்கள் கேலிசெய்தார்கள்..
கேள்விமேல் கேள்வி கேட்டார்கள்..

அமைதி காத்த அண்ணலார்..
இஸ்லாத்தை குரைஷியர்களின்..
உள்ளத்தில் சேர்ப்பதில்..
கவனம்கொண்டார்....

இடி முழக்கத்தை..
மின்னல் வெளிச்சத்தை..
மழை வெள்ளத்தை..
நிலநடுக்க பூகம்பத்தை..
பெரும் புயலை பெரும் கடலில்..
ஏற்படும் அழிவை..
அச்சத்தோடு அறிவித்தார்...

காலம் விரையமாக்குபவர்களில்..
ஒருவராக நீங்கள் இருந்து விடவேண்டாம்..
என்று எச்சரித்து கொண்டே இருந்தார்..

வண்ணம் தீட்டுவதில் ஏக இறைவனே...
வல்லவன் என்றார்..

வல்லவனின் வலிமையைச் சொல்லி..
வரலாறாய் வாழ்ந்தார்..

கல்லறையின் கொடுமையை சொல்லி..
கண்ணீர் வடித்தார்...

நரகத்தின் கொடுமையை சொன்ன..
இறைவனிடம் இறைஞ்சினார்..

அறுபத்து மூன்று ஆண்டுகால வாழ்வில்..
உலகம் படைக்கப்பட்டது முதல்..
உலகம் அழி்க்கப்படும் வரை..
இடைப்பட்ட காலத்தின் நிகழ்வுகளையும்..
நினைவில் நிலைக்க செய்த..
சிறப்பான தூதர்..

மனிதர்கள் தேர்ந்தெடுக்கும் நல்வழியாய்..
தன் வாழ்வியலை வகுத்தார்...
அழகிய முன் மாதிரி முஹம்மத்...
2 comments:

 1. very nice poem uncle
  in short wordings you wrote about prophet
  muhammed
  all the best write more about it

  with love
  mohammed maroof

  ReplyDelete
 2. நல்ல முயற்சி சகோதரரே. தங்களின் தமிழை செம்மைப் படுத்துங்கள்.

  சில உதாரணங்கள்
  உயர்குல என்று - உயர் குலமென்று
  தங்களை தாங்களே - தங்களைத் தாங்களே
  கேளிசெய்தார்கள் - கேலி செய்தார்கள்
  கவணம்கொண்டார் - கவனம் கொண்டார்
  காலம் விரையமாக்குரவர்களில் - காலத்தை விரையமாக்குபவர்களில்
  வளிமையை - வலிமையை
  வரலாராய் - வரலாறாய்
  கொடுமையை சொல்லி - கொடுமையைச் சொல்லி
  இறையஞ்சினார் - இறைஞ்சினார்
  படைக்கப்பட்ட முதல் - படைக்கப்பட்டது முதல்
  அழிகப்படும் - அழிக்கப்படும்
  அழகிய முன் மாதிரி முஹம்மத் - அழகிய முன் மாதிரி முஹம்மத்... அவரின் மீது சாந்தி உண்டாவதாக.

  ReplyDelete