அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

26 March 2011

முதிர் கன்னியின் குமுறல்கள்...

பெண் கேக்க வந்தவுக...
பொண் கேட்டாக..
பொருள் கேட்டாக..

மணக்க  வந்தவுக..
பெண்ன கேட்பாகளா..
பொண்ன  கேட்பாகளா..

 உழைக்கிறவுக...
உள்ளத்த கேட்பாக..
உறவ கேட்பாக...
சொகத்த கேட்பாக...
சொத்தையா ? கேட்பாக...

மலர் என்றாக..
மணம் என்றாக..
மதி என்றாக.. 
பெண்மை என்றாக..
மென்மை என்றாக..
மணக்கத்தான்..
வரம் கேட்டாக..

வாழ்க்கை பூக்காமலே..
வாழா வெட்டியாய்..
சமூக வழக்கத்த..
வாழையாடி வாழையாய்..
வாழ வைக்கிறாக...

கழுதைக்கு  வாக்கப்பட்டாலும்..
இன்பம் இல்ல..
இழப்பும் இல்ல....

1 comment:

  1. " ஊரான ஊரினிலே உறவு சொல்வார் யாருமில்லே
    தீராத சோகம்தன்னை தீர்த்து யாருமில்லே
    கேளுங்கள் முஸ்லிம் சோதரரே ஒரு
    குடும்பத்தின் கதையை
    கண்மணி ஃபாத்திமா வழியில் வந்த
    பெண்களின் நிலையை...

    சரணம்:
    ஃபர்தா அணிந்தமகள் பலநீதம் கற்றமகள்
    சர்தார் முஹம்மதுவின் பரம்பரையில் வந்தமகள்
    தலைசாய்ந்து நிற்கின்றாள் தர்மம் இது இல்லையம்மா
    கலையாத கூந்தலுக்கு மலர் தருவார் யாரு அம்மா?
    கேளுங்கள் முஸ்லிம் சோதரரே ஒரு
    குடும்பத்தின் கதையை
    கண்மணி ஃபாத்திமா வழியில் வந்த
    பெண்களின் நிலையை...

    என்கிற பாடல் நினைவுக்கு வருகின்றது.

    ReplyDelete