அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

05 March 2011

அன்புள்ள ஆட்சியாளர்களுக்கு....ஒடுக்கப்பட்டோம்..
உரிமை பறிகப்பட்டோம்..

பாலைவனத்தில்..
பரிதவிக்கப்பட்டோம்..

இயந்திரமாய் இருந்துவிட்டோம்..
இனியும் வரும் தலைமுறையை..
விடமாட்டோம்...

ஒரணி திட்டம் தொடங்கிவிட்டோம்..
அறியாமை வாசலை..
அடைத்துவிட்டோம்...

நிலையானவனின் நீதியானவனின்..
அடிமைதான் நாங்கள்..

யாருக்கும் எவருக்கும்...
அடிபணியமாட்டோம்..

அநீதி தழைக்க இனியும்..
பொருக்கமாட்டோம்..

குரல் கொடுக்கவும்..
போராட்டம்தொடுக்கவும்..
உயிர் துறக்கவும் துணிந்துவிட்டோம்...

சம உரிமை கிடைக்கும் வரை...
சம வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை...

போதும் சிறுபான்மை என்று..
சிறுமை படுத்தியது..

இந்தியாவின் இரண்டாவது..
பெரும்பான்மை மக்கள்தான் நாங்கள்..

இடஒதுக்கீடு எங்கள் வருங்கால..
தலைமுறைகளின் கனவு..

ஆட்சியாளர்கள் இன்றே இப்பவே..
சடடமாக்கவேண்டும்..

வேற்றுமையில் ஒற்றுமையோடு வாழ..
அதிகார பகீர்வுவேண்டும்...

No comments:

Post a Comment