அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

28 February 2011

அன்புள்ள சகோதரர்களுக்கு...!!!

அல்லாஹ் ஒருவனையே வணங்கிடுக..
மாநபி வழியில் நாளும் நடந்திடுக..

மாமறையை வாழ்வில் அணிந்திடுக..
ஐந்து கடமையை நிறைத்திடுக..

கற்ற கல்வியை கற்பித்திடுக..
வாழும் வாழ்க்கையை..
விளங்க விளக்கிடுக..

மனம் மகிழ்ந்து தர்மம் தந்திடுக..
செல்வம் இருப்பதில் தர்மம்..
அளப்பதில் முதன்மையாய் இருந்திடுக..

அறியாமையை இல்லாமையாய் ஆக்கிடுக..
ஒற்றுமையாய் ஒரணியில் திரண்டிடுக..

திகட்டாத இஸ்லாத்தில்..
முழுமையாய் நுழைந்திடுக...

கல்வி தோட்டத்தில்..
அறிவு கனியாய் இருந்திடுக..

அறபோராட்டத்தில் உங்கள் குரலும் ஒலிக்க..
அழைப்பை ஏற்று வந்திடுக..

இடஒதுக்கீடு கிடைக்காது நடக்காது..
முடியாது இயலாது என்ற..
விரக்தியை வீசி எறிந்திடுக....

நாளைய தலைமுறைக்கு இன்றே..
நல்வழி திறந்திடுக...

நற்பணிகள் நாளும் செய்திடுக...
நலமும் வலமும் பெற்று..
வாழ்ந்திடுக.....

1 comment:

  1. இஸ்லாமியக் கடமைகளை கவி நடையில்
    எடுத்துரைத்து, இறுதியில் வாழ்த்தோடு
    முடித்தவிதம் மனம் கவரும்வண்ணம்
    அமைந்துள்ளது.

    ReplyDelete