அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

08 December 2010

சதாம் ஹுசேன் சரித்திரம்...

சதாம் ஹுசேன் சரித்திரம்...

வாழ்ந்தவனின் வரலாறு தூக்கில் நிறைவுற்றது..
போராடியவன்-நீ போர்தொடுத்தவன்-நீ..
ஆட்சி அதிகாரத்தில் ஆட்டி வைத்தவன்-நீ..
உன் இளமை காலத்தில் இஸ்லாத்தை சற்று மறந்தவன்-நீ..
உருவம் கூடாது கொலை கூடாது கர்வம் கூடாது..
அழித்தல் கூடாது அகபாவம் கூடாது..
அனைத்தையும் அரங்கேற்றியவன்-நீ
உலகத்து நாயகனாய் உலாவந்தவன்-நீ..
உன் வீரவுரையில் வெற்றி கண்டவன்-நீ..
ஆட்சியாளனாய் ராணுவ தளபதியாய்..
உலக மக்கள் மனதில் பாவித்தவன்-நீ..
உன் மரணம் எல்லா ஆட்சியாளர்களுக்கும் எச்சரிக்கை..
குரல் கொடுக்க முடியாத ஆட்சியாளர்கள்..
நீதி நிலைநாட்ட முடியாத ஆட்சியாளர்கள்..
முடங்கித்தான் போனார்கள்....
ஆங்கிலேயரின் இனவெறி..
உன் தூக்கின்  மூலம் நிருபணமாகிவிட்டது..
நிறவெறியும் இனவெறியும் மொழிவெறியும்..
உலகில் தழைகச்செய்தது வெள்ளையர்களாள்தான்...

1 comment: