அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

31 December 2010

ஏகனவன்........

            ஏகனவன்..
என்னற்ற படைப்புகளை படைத்து..!
அதிபதியாய் ஆளுகிறவன்...!

அறிவுடையோர் ஏற்று வாழ..
அற்புதமாய் இஸ்லாம் தந்தவன்...

பொருமையில் மேன்மையானவன்..
உறுதியில் உண்மையானவன்...

புகழுக்கு உரியவன்..
முஹம்மத் நபியை தூதராக்கி..
இறைமறை வழங்கி ஐந்து கடமை..
நிறைத்து வாழ பூர்த்தி செய்தவன்...

நன்மைக்கும் தர்மத்துக்கும்..
பகரமாய் சொர்க்கம் தருபவன்..

செய்தபாவங்களை மன்னிக்க வேண்டினால்..
மன்னிக்க மனமுடைய்யவன்..

நெறியான வாழ்க்கை..
நேர்மையான செயல்..
பேனி வாழ மகத்துவமிக்க..
ஓர் இறைவன் போதுமான..
     ஏகனவன்.....!!!

1 comment:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


    இதையும் படிச்சி பாருங்க

    உடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்

    ReplyDelete