அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

10 December 2010

முதிர் கன்னிகளின் குமுறல்கள்...

நம் நாட்டில் புன்னகைக்காத..
பூக்கள் அதிகம் அத்தனையும்..
முதிர் கன்னிப்பூக்கள்..

பூக்களில் தேன் எடுக்க..
வண்டுக்களின் வரதட்சனை பேரம்..

பெரியார்களால் நிச்சயத்தார்த்தம்..
சீர்வரிசையில் பிடிவாதம்..
கொள்ளையடிக்கும் கூட்டமாக..
மாப்பிள்ளை வீட்டர்கள்...

கேட்பதும் கொடுப்பதும் தவறுதான்..
கால காலமாய் நம் சமுகத்தின்..
அறியாமை முடியாமை இயலாமை..
ஊனமாக முடங்கி கிடக்கிறது..

ஏழை கன்னிகளின்..
வரதட்சனை வளையம்..

மாலை அணிந்த திருமண விழா
மகிழ்விழா மனம் வரதட்சனையில்..
அரங்கேறியது...

No comments:

Post a Comment