அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

11 December 2010

யா அல்லாஹ் நீ-அருள்வாய்...!

படைத்த ஓர் இறைவா..!
உடல் உயிர் கொடுத்த இறைவா..!

உன் புகழ் உலகெங்கும்..
உன் பெயர் உலகெங்கும்..
ஒலிக்கிறதே இறைவா..!

பசி கொடுத்து உணவு வழங்கி..
நிறை தந்த இறைவா..!

உன் புகழ் ஒன்றே..
உலகில் போற்றி போற்றி..!

யாவம் தந்த நீயே..
யாவர் நலம் காப்பாய்..!

கொடுத்த உன்னை..
வணங்குவதை விட..
எனக்கென்ன வேலை...!

சொல்லும் செயலும்..
பதிய்ய வைக்கும் நீதீ-மானே..!

நிலம் தந்து வலம் தந்தருள..
நித்தம் நித்தம் உன் புகழ்..
பாடுவேன் உலகினிலே..!

விண்ணையும் மண்ணையும்..
ஆளும் அதிபதி-அல்லாஹ்வே..!

பஞ்சம் பறந்து பசி தீர்ந்து..
போதும் என மனம் வழங்கி..
செல்வம் வழங்குவாய்..!

உளம் நிறைந்த-அல்லாஹ்வே...
உன் புகழ் ஒன்றே...!
உலகில் ஒலிக்க கேட்பேன்....!!!

No comments:

Post a Comment