அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

08 December 2010

ஒரு இறைவன்..

ஒரு இறைவன்..
எல்லாம் படைத்தான்..

ஒரு இறைவன்..
எல்லாம் கொடுத்தான்..

உலகினிலே வாழ..
வைத்தான்..

ஆறறிவை நமக்கு..
தந்தான்..

மாநபியின் வழியை..
தந்தான்..

மாமறையில் வாழும்..
நெறியய் தந்தான்..

ஐந்து கடமை விதியாக்கி..
வாழ்க்கையில்  விதைத்து..
விளையும் நன்மை என்றான்..

ஒரு நாள் ஆயுள் கொண்ட..
பூக்களுக்கு புன்னகை தந்தான்..

பொறுமையுடன் கேளுங்கள்..
தருகிறேன் என்று சொன்னான்..

ஒரு இறைவன்..
எல்லாம் படைத்தான்...       

No comments:

Post a Comment