அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

01 January 2011

ஆறாவது -அறிவு....

ஏதோ உனக்கு..
கோளாரு இருக்கிறது..

சிந்திக்காத தடம் புரளும்..
உன்னை என்ன செய்வது..

மறக்க பிறந்த -அறிவாய்..
நீ ஏன்? இன்னும் இருக்கிறாய்..

சொல் காத்து வாழ..
செயல் காத்து வாழ..

உலகில் அமைதி நிலவ..
மனிதனுக்குள் தழைக்காமல்..
விதையாகவே இருக்கிறாய்...

உன் மீது போர் குற்றம்..
சுமத்தினால் என்ன தவறு..

விண்ணுக்கு சென்று வர..
உதவியது நீ...

மண்ணுக்குள் மகிழ்ந்து வாழ..
மனம் வைக்கலாகதா..?

நாகரீக கலாச்சார நச்சை..
அரை நிர்வாண இழுக்கை..
மதம்- நிறம்-மொழி-வெறி-கொச்சை..
வளர்ச்சி என்று வர்ணிக்கிற..
உன்னை தேவை என்பதா ..?

நீ-எனக்குள் இல்லை என்றால்..
முழு மனிதனாக இருக்க..
வாய்ப்பு இல்லை...

நீ நானாக மட்டும் இல்லாமல்..
நாங்களாக நன்மையாக..
நட்பாக நலமாக வலமாக..
எல்லோருக்குள்ளும்..
குடியேறி விருட்சமாய்..
விழித்தெழு உலகில்..
அமைதி அறவ உன் சேவை..
தேவையாக இருக்கிறது....

No comments:

Post a Comment